IPL: ரிஷப் பண்ட் ரெடி... இந்த முறை மிஸ்ஸே ஆகாது - ஐபிஎல் ரீ-என்ட்ரி கன்பார்ம்!?

IPL 2024: வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 20, 2024, 07:45 PM IST
  • ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் பங்கேற்றார்.
  • ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடர் நடைபெறும்.
  • ரிஷப் பண்ட் வரும் மார்ச் மாதத்திற்குள் ரெடியாவார் என தகவல்.
IPL: ரிஷப் பண்ட் ரெடி... இந்த முறை மிஸ்ஸே ஆகாது - ஐபிஎல் ரீ-என்ட்ரி கன்பார்ம்!? title=

IPL 2024 Latest News: ஐபிஎல் டி20 தொடர் வழக்கமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இப்போட்டி நடைபெறும் சூழலில், இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை பொதுத்தேர்தலும் நடைபெற இருக்கின்றன. எனவே, ஐபிஎல் போட்டிகள் எப்போது, எங்கு நடைபெற உள்ளன என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் ஐபிஎல் இறுதிகட்ட போட்டிகள் இந்தியாவில்தான் நடைபெறும் என்பது உறுதி எனலாம். 

ரிஷப் பண்டின் ரீ-என்ட்ரி

மேலும், வரும் ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மீண்டும் களமிறங்க இருப்பதை அவரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதேபோல், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருப்பது, ரிஷப் பண்டின் ரீ-என்ட்ரிக்குதான் எனலாம். கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி கடுமையாக காயமடைந்ததால் ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஓடிஐ உலகக் கோப்பை என பல தொடர்களை ரிஷப் பண்ட் பங்கேற்கவில்லை.

தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து, கிரிக்கெட் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் வரும் ஐபிஎல் சீசன் மூலம் முதல் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உயர் அதிகாரிகளுள் ஒருவரான பிகேஎஸ்வி சாகர் ரிஷப் பண்டின் ரீ-என்ட்ரி குறித்து அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அஸ்வின் பந்தை போட்டுத் தாக்குவது எப்படி...? இங்கிலாந்துக்கு பீட்டர்சனின் அறிவுரை!

விடா முயற்சி

குறிப்பாக, ஐபிஎல் தொடருக்கு அவர் திரும்புவதற்கான முதல் அறிகுறி கடந்தாண்டு நவம்பர் தென்பட்டது எனலாம். ரிஷப் பண்ட் அப்போது கொல்கத்தாவில் நடந்த டிசி முகாமில், அணியின் முக்கிய உறுப்பினர்களான சவுரவ் கங்குலி (கிரிக்கெட் இயக்குநர்), ரிக்கி பாண்டிங் (தலைமைப் பயிற்சியாளர்) மற்றும் பிரவின் ஆம்ரே (உதவி பயிற்சியாளர்) ஆகியோருடன் கலந்து கொண்டார். அதேபோல், கடந்த டிச.19ஆம் தேதி துபாயில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் சார்பில் ரிஷப் பண்ட் பங்கேற்றார். 

ரிஷப் பண்ட் ரீ-என்ட்ரி குறித்து சாகர் பேசியதாவது, 'ஆம், அவர் இந்த சீசனில் விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் எங்களுக்கு ஒரு முக்கிய வீரர், அவர் திரும்பினால், அது ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமாக இருக்கும். எங்கள் பயிற்சியாளர் மற்றும் பிசியோ குழுக்கள் அவரது முழ உடற்தகுதிக்கு விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகின்றனர்.

டேவிட் வார்னர்

மேலும் அவர் சிறப்பாக முன்னேறி வருவதுதான் சிறந்த அம்சம். அவர் உடற்தகுதியுடன் இருப்பார் மற்றும் மார்ச் மாதத்திற்குள் எங்களுக்காக விளையாடத் தயாராக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என்றார்.

அமீரக கிரிக்கெட் வாரியத்தால் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்படும் சர்வதேச லீக் டி20 தொடரில், துபாய் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனும், ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னரை துபாய் கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. 

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய்க்கும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன் 5 கோடி ரூபாய்க்கும், மேற்கிந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஷாய் ஹோப்பை  75 லட்ச ரூபாய்கும் வாங்கியது. இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குமார் குஷாக்ராவை 7.2 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியது.

மேலும் படிக்க | இந்து மதத்தை பின்பற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்..!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News