புதுடெல்லி: ஐசிசி இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 2024 முதல் 2031ஆம் ஆண்டு வரையிலான ஐ.சி.சி ஆடவர் உலகக்கோப்பை மற்றும் டி-20 போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் சர்வதேச டி-20 போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலினால், ஐ.பி.எல் போட்டிகளே இடைநிறுத்தப்பட்டு, எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்விகள் பலத்த குரலில் எழும் சமயத்தில் ஐ.சி.சி 2031 ஆண்டு வரையிலான சர்வதேச ஆடவர் போட்டி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ICC announces expansion of global events.
Details https://t.co/q58H2CYzRK
— ICC (@ICC) June 1, 2021
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்படாவிட்டால், டி-20 உலகக்கோப்பை போட்டியும் ஐக்கிய அரசு அமீரகத்திலேயே நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் அக்டோபர் மாதத்தில் தான் டி20 உலகக்கோப்பை நடக்கும் என்பதால், ஐ.சி.சி, பிசிசிஐ-க்கு ஜுன் 28ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது.
ஐ.சி.சி ஆண்களின் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐ.சி.சி ஆண்களின் டி 20 உலகக் கோப்பை இரண்டும் விரிவுபடுத்தப்படும் என்றும், ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் அறிமுகப்படுத்தப்டும் என்றும் கூறிய ஐ.சி.சி வாரியம், 2024-2031 முதல் ஐ.சி.சி வரை நடைபெறவிருக்கும் போட்டிகளின் அட்டவணையை இன்று உறுதிப்படுத்தியது.
Also Read | வேட்டி கட்டி வேற லெவலில் கலக்கும் CSK சின்ன தல சுரேஷ் ரெய்னா: வீடியோ வைரல்
ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்கு பெறும். 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் 54 போட்டிகளாகவும், ஐ.சி.சி ஆடவர் டி 20 உலகக் கோப்பை போட்டிகளில் 20 அணிகள் இடம்பெறும். 2024, 2026, 2028 மற்றும் 2030 நடைபெறும் போட்டிகள் 55 போட்டிகள் கொண்டதாக விரிவுபடுத்தப்படும்.
2025 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளில் எட்டு அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை போட்டி நடத்தப்படும். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் 2025, 2027, 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடத்தப்படும்.
Also Read | வெள்ளிக்கிழமை தொடங்கும் ஐபிஎல்? வெளியான முக்கிய தகவல்
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டி 20 உலகக் கோப்பை இரண்டையும் விரிவாக்குவதை ஏற்கனவே ஐ.சி.சி உறுதிப்படுத்தியது. இது, மகளிர் கிரிக்கெட் போட்டிகளை மேபடுத்துவதற்கான ஐ.சி.சியின் நீண்டகால உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.
ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் ஏழு குழுக்கள் இருக்கும், ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று அணிகள் சூப்பர் சிக்ஸ் நிலைக்கு முன்னேறும். ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2003 இல் பயன்படுத்தப்பட்ட அதே வடிவம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ALSO READ | 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்? பதிலளித்தார் தமிழக கல்வி அமைச்சர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR