இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணியும் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணியில் பூனம் ராவ்த் சிறப்பாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் 69 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மேலும், இன்றையப் போட்டியில் உலக பெண்கள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி அடுத்து, நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும்.