முத்தரப்பு தொடரின் இரண்டாவது டி-20 போட்டி நேற்று, இந்தியா-வங்கதேசம் இடையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.
அந்த அணி லிடான் தாஸ் 34, சபீர் ரஹ்மான் 30 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இந்திய தரப்பில் ஜெயதேவ் உனாட்கட் 3, விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலக்கான 140 ரன்களை இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18.4 ஓவர்களில் எட்டியது.
இந்திய அணியில் சிக்கர் தவான் 55, சுரேஷ் ரெய்னா 28 மற்றும் மணிஷ் பாண்டே 27 ரன்கள் எடுத்தனர்.