இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில் அடுத்த 3 டெஸ்டுகளில் முறையே 246 ரன், 8 விக்கெட், இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் ஆகிய வித்தியாசங்களில் இந்திய அணி இமாலய வெற்றியை பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியுள்ளது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி தற்போது முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குக், ஜென்னிங்ஸ் களம் இறங்கினார்கள். 6-வது ஓவரில் முதல் விக்கெட்டை இங்கிலாந்து இழந்தது. இஷாந்த் சர்மா பந்தில் ஜென்னிங்ஸ் அவுட் ஆனார். அடுத்து ஜோரூட் களம் வந்தார். கேப்டன் குக் 10 ரன்னில் ஜடேஜா பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 21 ரன்னாக இருந்தது. அடுத்து ஜோரூட்டுடன் மொய்ன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக
விளையாடினார்கள். ஜோ ரூட் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய மொயீன் அலி சதம் அடித்தார். இந்த தொடரில் இது அவரது 2-வது சதமாகும். மொயீன் அலி 120 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்துள்ளது.
இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து அணி தனது ஆட்டத்தை தொடர்ந்தது. மொயீன் அலி நிதானமாக நிலைத்து நின்று ஆடினார். மொயின் அலி 146 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆனார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்கள் குவித்தது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. காயம் காரணமாக முரளி விஜய் ஆடவில்லை. அவருக்கு பதிலாக பார்தீவ் பட்டேல், லோகேஷ் ராகுல் உடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 30 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 28 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
At Stumps on Day 2 of the 5th Test, India 60/0 in 20 overs, trail England 477/10 by 417 runs https://t.co/sEPaSEtUfU #INDvENG pic.twitter.com/IlwvvCTAkZ
— BCCI (@BCCI) December 17, 2016