IND vs ENG: லார்ட்ஸ் டெஸ்டில் ஏன் சேர்க்கப்படவில்லை? உண்மையை சொன்ன ரவிச்சந்திரன் அஷ்வின்

கிரிக்கெட் செய்திகள்: அஸ்வினால் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் விளையாட முடியவில்லை. ஆனால் அவர் மூன்றாவது டெஸ்டில் (England vs India, 3rd Test) விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2021, 06:51 PM IST
  • இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
  • அஸ்வினால் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியி விளையாட முடியவில்லை.
  • வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால், நான் களம் இறங்கவில்லை.
IND vs ENG: லார்ட்ஸ் டெஸ்டில் ஏன் சேர்க்கப்படவில்லை? உண்மையை சொன்ன ரவிச்சந்திரன் அஷ்வின் title=

கிரிக்கெட் செய்திகள்: இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதுக் குறித்து அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணி (India tour of England 2021), அந்நாட்டுக்கு எதிராக தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி ட்ராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் (Ravichandran Ashwin) சேர்க்கப்படவில்லை. ஏன் அவரை சேர்க்கவில்லை என கேள்விகள் எழுந்தன. அதற்கான காரணத்தை குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

மூத்த பந்துவீச்சாளர் தனது YouTube நிகழ்ச்சியான குட்டி ஸ்டோரி-யில் லார்ட்ஸில் விளையாடாததற்கான காரணத்தை வெளிப்படுத்தினார். அன்று மழை பெய்ததால், அதன் காரணமாக, இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், போட்டிக்கு முன் என்னிடம் 'வெளியே வானிலை சரியாக இருக்கிறது. தயவுசெய்து தயாராக இருங்கள். நீங்கள் களம் இறக்கப்படுவீர்கள்" எனக் கூறினார்கள். ஆனால் காலை உணவுக்குப் பிறகு மழை பெய்யத் தொடங்கியது. அதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால், நான் களம் இறங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 

ஆகஸ்ட் 25 முதல் மூன்றாவது டெஸ்ட்:
அஸ்வினால் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் விளையாட முடியவில்லை. ஆனால் அவர் மூன்றாவது டெஸ்டில் (England vs India, 3rd Test) விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. முதல் டெஸ்டில் ஷர்துல் தாக்கூர் காயமடைந்ததால் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில், இரண்டாவது டெஸ்டில், இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இப்போது இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆகஸ்ட் 25 முதல் லீட்ஸ் நகரில் நடைபெறும்.

ALSO READ | India vs England, 2nd Test: மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்தியா

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து (England squad) அறிவித்துள்ளது. மூன்றாவது டெஸ்டில், டோம் சிப்லியின் இடத்தில் டேவிட் மாலனை தங்கள் அணியில் சேர்த்தனர். மூன்று வருடங்களுக்குப் பிறகு மலான் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக மாலன் தனது கடைசி டெஸ்டில் விளையாடினார்.

இங்கிலாந்து அணி விவரங்கள்:
ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், ஹசீப் ஹமீட், டான் லாரன்ஸ், சாகிப் மஹ்மூத், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், மார்க் வூட் .

ALSO READ | Team India: வேகத்தில் மிரட்டும் இந்திய பவுலர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News