04:24 29-02-2020
#INDvNZ இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து பந்து வீச உள்ளது.
Kane Williamson has won the toss and elected to bowl at Hagley Oval. Neil Wagner comes into the XI for Ajaz Patel. 12-15 first ball. #NZvIND pic.twitter.com/6KaQJSziO8
— BLACKCAPS (@BLACKCAPS) February 28, 2020
கிறிஸ்ட்சர்ச்: இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. முதல் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடரை சமன் செய்ய வேண்டும் என்றால், விராட் தலைமையிலான இந்திய அணி இன்றைய டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Covers off at Hagley Oval. Delayed toss after the morning rain. Umpires inspecting the ground at the moment. Toss update to come. #NZvIND pic.twitter.com/TrvotOGweK
— BLACKCAPS (@BLACKCAPS) February 28, 2020
இன்றைய வானிலை பார்த்தால் போட்டி நடைபெறும் கிறிஸ்ட்சர்ச்சில் 18 முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானம் மேகமூட்டமாக இருக்கும். மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது லேசான தூரல் போட்டதால், மைதானத்தில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளதால், அரைமணிநேரம் கழித்து டாஸ் போடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு உகுந்ததாக இருக்கும்.
UPDATE l The sun is out at Hagley Oval and we will have an 11-45am toss with play to start at 12-15pm. #NZvIND pic.twitter.com/j7EMduYzHo
— BLACKCAPS (@BLACKCAPS) February 28, 2020
இரு அணிகளுக்கும் இடையிலான வெலிங்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 300 விக்கெட் கிளப்பில் சேர வாய்ப்பு இருந்தது. இந்த சாதனையை செய்ய இன்னும் 3 விக்கெட் தூரம் தான் உள்ளது. ஆனால் அவருக்கு காலில் வலி இருப்பதால், இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். ஒருவேளை அவர் இன்றைய போட்டியில் விளையாடி இருந்தால், 300 விக்கெட்டுகளை வீழ்த்தும் ஆறாவது இந்தியர் என்ற பெருமையை இஷாந்த் பெறுவார். இந்திய அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே அதிகப்பட்சமாக 619 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
அதே நேரத்தில், நியூசிலாந்தில் நடந்த 24 போட்டிகளில், 5 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 10 டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இரு அணிகளுக்கிடையில் இதுவரை 20 தொடர்கள் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி 11 முறை வென்றது. 5 முறை தோற்றது. 4 தொடர்கள் சமநிலையில் முடிந்தது.
இந்திய அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா.
நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளெண்டால், ட்ரெண்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜாமீசன், ஹென்றி நிக்கோல்ஸ், ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டாரெல் மிட்செல், எஜாஸ் படேல், டிம் சவுத்தி, நீல் வாக்னர், பி.ஜே.வாட்லிங் மற்றும் மாட் ஹென்றி.