நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்களை குவித்தது. அதில், அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 80, ஷிகர் தவான் 72, சுப்மன் கில் 50 ரன்களையும் எடுத்தனர். மேலும், கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 36 ரன்களை அதிரடியாக குவித்தார்.
நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் டிம் சௌதி, லோக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 307 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
There it is! 76 balls, 14 fours, 3 sixes - @Tomlatham2's 7th ODI hundred #NZvIND pic.twitter.com/0Qe7f3LgLp
— BLACKCAPS (@BLACKCAPS) November 25, 2022
மேலும் படிக்க | பிட்சை விட்டு வெளிய வந்த ஷாட் ஆடிய வாஷிங்டன்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
இந்தியாவின் போல் அல்லாமல் நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் வலுவான பாட்னர்ஷிப்பை அமைக்கவில்லை. ஃபின் ஆலன் 22 ரன்களுடனும், டேவான் கான்வே 24 ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த டேரில் மிட்செலும் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆலன் விக்கெட்டை ஷர்துல் தாக்கூர் கைப்பற்றிய நிலையில், மற்ற இருவரையும் உம்ரான் மாலிக் தனது வேகத்தால் கவனித்து கொண்டார்.
அப்போது, 19.5 ஓவர்களில் நியூசிலாந்து 88 ரன்களை மட்டும் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து, கேப்டன் கேன் வில்லியம்சன் உடன், டாம் லாத்தம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை கடைசிவரை இந்திய பந்துவீச்சாளர்களால் பிரிக்கவே முடியவில்லை.
1-0 up in the Sterling Reserve ODI Series! An unbroken 221 run stand between Tom Latham (145*) & Kane Williamson (94*) sees the team to victory at @edenparknz.
Catch up on the scores | https://t.co/lLMC9ZDQjh#NZvIND pic.twitter.com/OUsTue7akt
— BLACKCAPS (@BLACKCAPS) November 25, 2022
நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடியில், லாத்தம் அதிரடியாக ரன்களை குவிக்க, வில்லியம்சன் வழக்கம்போல் நிதானம் காட்டினார். லாத்தம் சதம் அடித்து மிரட்டினார். இதனால், நியூசிலாந்து அணி 46. 5 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லாத்தம் 104 பந்துகளில் 19 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 145 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1சிக்ஸர் என 94 ரன்களை எடுத்திருந்தார். இதில், லாத்தம் 145 ரன்கள் அடித்த நிலையில், இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை லாத்தம் படைத்துள்ளார்.
அர்ஷ்தீப், ஷர்துல், உம்ரான் மாலிக், சஹால் ஆகிய அனைவரும் ரன்களை வாரி வழங்கினார். வாஷிங்டன் சுந்தர் மட்டும் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 42 ரன்களை மட்டும் கொடுத்திருந்தார். மற்றவர்கள் அனைவரின் எகமானியும் 6.5-க்கு மேலாக இருந்தது. அர்ஷ்தீப் 8.1 ஓவரில் மட்டும் 68 ரன்களை கொடுத்து மோசமாக வீசினார். அடுத்த போட்டி, நாளை மறுதினம் நடக்க உள்ளதால், பந்துவீச்சு வரிசையில் மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? சோக கதை மூலம் ஷிகர் தவான் விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ