Ind Vs SL: இலங்கையிடம் தடுமாறுகிறதா இந்திய அணி?

இந்தியா- 17 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 5(26) மற்றும் முரளி விஜய் 28(41) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Last Updated : Dec 2, 2017, 01:21 PM IST
Ind Vs SL: இலங்கையிடம் தடுமாறுகிறதா இந்திய அணி? title=

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையடி வருகிறது!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

முன்னதாக, கொல்கத்தாவில் நடைப்பெற்ற முதலாவது டெஸ்ட் மழை காரணமாக "ட்ரா" ஆனது. நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதனால் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் இன்று 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையடி வருகிறது.

ஆரம்பத்தில் நிதானமான விளையாட்டை வெளிப்படுத்திய போதிலும், இந்தியாவிற்கு ஆரம்ப அடியாய், துவக்க ஆட்டகாரர் தவான் 23(35) ரன்களில் வெளியேறினார். எனினும் சற்று சுதாரித்துக் கொண்ட இந்தியா சற்று நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது!

Live Score Updates

தற்போதைய நிலவரப்படி இந்தியா; 17 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 5(26) மற்றும் முரளி விஜய் 28(41) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Trending News