IND vs WI: 20 ஓவருக்கு 207 ரன்கள் எடுத்த வெ.இண்டீஸ்; அடுத்தது இந்தியா..!!

முதல் டி 20 போட்டியில் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வெற்றி பெற 208 ரன்கள் தேவை.  

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Dec 6, 2019, 09:02 PM IST
IND vs WI: 20 ஓவருக்கு 207 ரன்கள் எடுத்த வெ.இண்டீஸ்; அடுத்தது இந்தியா..!!
Pic Courtesy : @bcci

20:45 06-12-2019
இந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் (Shimron Hetmyer) 56(41) ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்திய அணி வெற்றி பெற 208 ரன்கள் தேவை.

 


19:48 06-12-2019
மூன்றாவது விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி. 11 ஓவர் முடிவில் 107 ரன்கள் எடுத்துள்ளது.


19:44 06-12-2019
முதலில் பேட்டிங் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 10 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.


ஹைதராபாத்: இந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது. நான்கு மாதங்களுக்கு பிறகு இரு அணிகளும் மீண்டும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றன. இரு அணிகளும் (India vs West Indies) இடையிலான முதல் டி 20 போட்டி இன்று, ஹைதராபாத்தில் (Hyderabad T20) உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக தொடரை வென்ற பிறகு, இந்திய கிரிக்கெட் அணி (Team India) மீண்டும் ஒரு முறை எதிரணியை துவசம் செய்ய களம் இறங்கியுள்ளது.

இந்த முறை மேற்கிந்திய தீவுகள் (West Indies) அணி இந்திய மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. அதேபோல இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது மூன்று விதமான (டி-20, ஒருநாள், டெஸ்ட்) தொடரையும் இந்தியா வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது. 

 

 

இந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையில் விளையாட வேண்டிய இந்தத் தொடரில் "நோ பந்தை" டிவி நடுவர் முடிவு செய்வார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கருத்துப்படி, மூன்றாவது நடுவர் "நோ பந்து" மீது தனது கண்களை வைத்திருப்பார். மூன்றாவது நடுவர் அது "நோ பந்தா? இல்லையா? என்று கண்டுபிடித்து, பிறகு அவர் ஆன்-பீல்ட் அம்பயருக்கு அறிவிப்பார். அதன் பின்னர் ஆன்-பீல்ட் நடுவர் இறுதியாக தீர்ப்பை முறையாக வழங்குவார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே இந்திய மண்ணில் இதுவரை மொத்தம் 14 டி 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் எட்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல ஐந்து போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்போது நடைபெற உள்ள தொடரின் மூன்று போட்டிகளிலும் வெ.இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே, இந்தியாவுக்கு சமமாக வர முடியும்.

T20 போட்டி அட்டவணை: 
முதல் டி-20 போட்டி: மும்பை - டிசம்பர் 6 
2 வது டி-20 போட்டி: திருவனந்தபுரம் - டிசம்பர் 8 
3 வது டி-20 போட்டி: ஹைதராபாத் - டிசம்பர் 11 

டி-20 இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷாமி குமார், வாஷிங்டன் சுந்தர்.

டி-20 அணி மேற்கிந்திய தீவுகள்: கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், கெமோ பால், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைரி பியர், நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்டின், ஷெரிஃபன் ரதர்ஃபோர்ட், லென்ட்ல் சிம்மன்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஹேடன் வால்ஸ் ஜூனியர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.