ரோஹித் vs விராத் இடையே பிளவா? என்ன சொல்கிறார் கேப்டன் கோலி

கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது. அணியில் எந்தவி பிரச்சனையும் இல்லை என்பதற்கு இதுவே சான்று என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 29, 2019, 07:51 PM IST
ரோஹித் vs விராத் இடையே பிளவா? என்ன சொல்கிறார் கேப்டன் கோலி

மும்பை: ஐ.சி.சி உலகக் கோப்பையின் தோல்வியை மறந்துவிட்டு இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் (India vs West Indies) செல்கிறது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பு, கோஹ்லி இன்று (ஜூலை 29) மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். இந்த நேரத்தில், அவரிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சுதந்திரமாகவும் விரிவாகவும் பதிலளித்தார்.

கேப்டன் விராட் கோலியின் தலைமையில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, அந்தநாட்டுடன் மூன்று டி-20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் முதல் இரண்டு டி-20 போட்டி அமெரிக்காவின் லாடர்ஹில்லில் நடைபெற உள்ளது. மற்ற போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும். ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் இரு நாடுகளுக்கிடையே தொடங்க உள்ளது.

இந்தநிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் வந்தார். அப்பொழுது ரோஹித் சர்மா தொடர்பான கேள்வி அதிகம் கேட்கப்பட்டது. முதலாவதாக, டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா இடம் குறித்து பேசப்பட்டது. 

இதற்குப் பிறகு உங்களுக்கும் (விராட் கோலி) ரோஹித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது என பல செய்திகள் வெளியாகி வருகிறது.  அதுக்குறித்து என்ன சொல்ல விரும்புகிறார்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். 

அதற்கு பதில் அளித்த விராட் கோலி, “நானும் சில செய்திகளை கேள்விப்பட்டேன் கேட்டிருக்கிறேன். இதுபோன்ற செய்திகள் வெளியில் இருந்து வருகின்றன. உண்மை என்னவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது. அணியில் எந்தவி பிரச்சனையும் இல்லை என்பதற்கு இதுவே சான்று. அணியில் எல்லோரும் ஒருவருக்கொருவர் மீது நம்பிக்கை மற்றும் மரியாதை வைத்துள்ளனர் எனக் கூறினார் விராட் கோலி. 

More Stories

Trending News