இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட்: உணவு இடைவேளை வரை 415/7

Last Updated : Nov 18, 2016, 11:58 AM IST
இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட்: உணவு இடைவேளை வரை 415/7 title=

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரனகள் குவித்தது. புஜாரா 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ஆடிய விராத் கோலி மற்றும் புஜாரா தங்கள் சதத்தை நிறைவு செய்தனர். 204 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்த புஜாரா அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய ரஹானே 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

பின்னர் விராத் கோலியுடன் ஜோடி சேர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடி வருகிறார். கேப்டன் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார்.

அடுத்து வந்த சகா 3 ரன்னிலும், ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும் மொயீன் அலி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இதனால் இந்தியா 363 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது.

8-வது விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் புதுமுக வீரர் ஜயந்த் யாதவ் ஜோடி சேர்ந்தார். 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்துள்ளது.

Trending News