டி20 உலகக் கோப்பை 2022: இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே எப்போதுமே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. களத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் போதெல்லாம். லட்சக்கணக்கான மக்களின் பார்வை போட்டியின் மீது பதிந்திருக்கும். ஒவ்வொரு முறையும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் ஒளிபரப்பாகும் போது டிஆர்பி ரேட்டிங்கில் புதிய சாதனைகளை படைக்கிறது. இரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 23 அக்டோபர் 2022 அன்று நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடனே வெறும் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டது. இப்போது காத்திருப்பு பட்டியல் அடிப்படையில் சில டிக்கெட்டுகளை விற்க ஐசிசி முடிவு செய்துள்ளது. இருப்பினும், இதற்கு ரசிகர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விருந்தோம்பல் திட்டத்திற்கான சில டிக்கெட்டுகள் இன்னும் விற்கப்படவில்லை. இதில் ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 1200 டாலர்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் போட்டி தொடங்குவதற்கு முன்பே விற்பனையாகிவிட்டதாக ஆங்கில இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
Tickets are on sale now for the ICC Men's T20 World Cup Australia 2022
Get your tickets here: https://t.co/CvibedsYAz #T20WorldCup pic.twitter.com/2rzlcnXlxH
— T20 World Cup (@T20WorldCup) February 7, 2022
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கு சுமார் 1 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளது. ஆனால் கொரோனா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, முன்பதிவு செய்ய 60 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், மீதமுள்ள இருக்கைகளுக்கான டிக்கெட் முன்பதிவு மீண்டும் திறக்கப்படுகிறதா இல்லையா என்பது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் இந்திய பங்கேற்கும் போட்டி அட்டவணை:
போட்டி 1: இந்தியா vs பாகிஸ்தான் - அக்டோபர் 23, மெல்போர்ன்
போட்டி 2: இந்தியா vs. குரூப் ஏ வெற்றியாளர் - 23 அக்டோபர், சிட்னி
போட்டி 3: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - அக்டோபர் 30, பெர்த்
போட்டி 4: இந்தியா vs வங்கதேசம் - நவம்பர் 2, அடிலெய்டு
போட்டி 5: இந்தியா vs. குரூப் பி வெற்றியாளர் - நவம்பர் 6, மெல்போர்ன்
மேலும் படிக்கவும்: வெற்றி பாதைக்கு திரும்பிய இந்திய அணி..! 1000-வது போட்டியில் அபார வெற்றி
டி20 உலகக் கோப்பையை 2021 கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். இம்முறை உலகக் கோப்பை அவரது (ஆஸ்திரேலியா) சொந்த மண்ணில் நடக்கிறது. உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்க உள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 13, 2022 அன்று நடைபெற உள்ளது.
உலகக் கோப்பையின் 45 போட்டிகளுக்கும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியைத் தவிர, இறுதிப் போட்டிக்கான அதிகபட்ச முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் நேருக்கு நேர் மோதின. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை. இந்திய அணி 151 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி இந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்: WC Final: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR