இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூர் ஷெர்-இ-பங்களா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. இருப்பினும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டும் என்றால், இந்தியா இந்த போட்டியையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது நினைவுக்கூரத்தக்கது.
மேலும், ஒருநாள் தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மாவுக்கு மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின்போது, கை விரலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, காயத்தை பொருட்படுத்தாமல் அந்த போட்டியில் அதிரடியாக விளையாடிருந்தார்.
பயிற்சியின்போது காயம்
இருப்பினும், காயத்தின் தீவிரம் கருதி மீண்டும் பரிசோதனைக்காக மும்பை திரும்பிய அவர், முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். தொடர்ந்து, இரண்டாவது போட்டியிலும் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டதால், முதல் போட்டியை போலவே இரண்டாவது போட்டியிலும் துணை கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
Preps
Just one sleep away from the second #BANvINDTest#TeamIndia pic.twitter.com/br75gzwEO8
— BCCI (@BCCI) December 21, 2022
இவர் தலைமையில் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா வெற்றி பெற்ற நிலையில், அதே கையோடு இரண்டாவது போட்டியையும் வென்று நாடு திரும்ப எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில், நேற்றைய பயற்சியின்போது கேப்டன் கேஎல் ராகுலின் இடதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டதாகவும், காயம் அடைந்த பகுதியில் ஐஎஸ் வைத்து ஒத்தடம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், காயத்தால் விரலின் வீக்கம் குறையவில்லை என்றாலோ அல்லது கூடுதலாக வீக்கம் ஏற்பட்டாலோ அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறிதான். அவர் போட்டியில் இருந்து விலகும்பட்சத்தில், துணை கேப்டன் புஜாரா கேப்டன் பொறுப்பை ஏற்பார்.
சுழலுக்கு சாதகம்
இதுகுறித்து, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விகரம் ரத்தோர் கூறுகையில்,"காயம் பெரியதாக தெரியவில்லை. அவர் நலமுடன் இருப்பதாகவே தெரிகிறது, நலமுடன் இருக்கிறார் என நம்புகிறோம். மருத்துவர்கள் அவரை சோதித்து வருகின்றனர், இருப்பினும் அவர் நலமுடன் இருப்பார் என்றே நம்புகிறோம்" என்றார்.
The Bangladesh U19 team met and interacted with @imVkohli, @RishabhPant17 and @imkuldeep18 in Dhaka today. #TeamIndia #BANvIND pic.twitter.com/2uJP0NuUHA
— BCCI (@BCCI) December 21, 2022
போட்டி நடைபெறும் ஆடுகளம் சுழலுக்கே அதிகம் ஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், சிராஜ், உமேஷ் யாதவ் பந்துவீச்சு சுமையை அஸ்வின் - குல்தீப் - அக்சர் கூட்டணி பகிர்ந்துகொள்ளும் என தெரிகிறது. கேஎல் ராகுல் போட்டியில் இருந்து விலகினால், கேஎஸ் பரத் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரில் யாரவது ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தலைவர் எச்சரிக்கை! இதை மட்டும் செய்யாதீர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ