)
Weight Loss Tips: உலகில் பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இடுப்பு மற்றும் தொப்பை கொழுப்பை குறைப்பது பலருக்கு பிரம்ம பிரயத்னமாகவே மாறி விட்டது. ஒரு முறை எடை அதிகரித்து விட்டால், அதை குறைப்பது ஒரு பெரிய சவாலாக உருவெடுத்து விடுகின்றது. வயிற்றில் கொழுப்பு அதிகரிப்பதற்கு பெரும்பாலான மக்கள் உணவைக் குறை கூறினாலும், உடல் பருமனை சரி செய்ய எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
இன்றைய பிஸியான வாழ்க்கையில், நம்மால் நம்மை சரியாகக் கவனித்துக் கொள்ள முடிவதில்லை. ஆரோக்கியமற்ற உணவுமுறை, வாழ்க்கை முறை, உடல் செயல்பாடுகள் இல்லாத நிலை ஆகியவற்றால் வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது.
வறுத்த அல்லது இனிப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிடுவது உடலில் தேவையற்ற மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த உணவுகள் தான் வயிற்று கொழுப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் வயிற்று கொழுப்பை குறைக்க அல்லது கட்டுப்படுத்த பல வழிகளை பரிந்துரைக்கின்றனர். உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது இதில் முதன்மையானது. தொப்பை கொழுப்பைத் தடுக்கவும், உடல் பருமனைக் கட்டுப்படுத்தவும் வாழ்க்கை முறையில் மாற்றம் மிகவும் முக்கியமானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொப்பை கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்படுத்தும் வழிகள்
- தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்கவும், எடையைக் கட்டுப்படுத்தவும் உணவு கட்டுப்பாடும், உணவில் கவனமும் மிக அவசியமாகும்.
- கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட மற்றும் இனிப்பு உணவுகளையும் உட்கொள்வதைத் தவிர்க்கவும் அல்லது குறைக்கவும்.
- உங்கள் உணவில் மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்கவும்.
- மதுபானம் மற்றும் காஃபின் உள்ள பானங்களை தவிர்ப்பது நல்லது.
- தினசரி உணவில், கருப்பு மிளகு, பூண்டு, இஞ்சி, பூசணி விதைகள், வீட் கிராஸ், கொழுப்பு நிறைந்த மீன், மஞ்சள் போன்ற உணவுகளை சேர்க்கவும்.
- கல்லீரல் மற்றும் வயிற்றை சுத்தமாக வைத்திருக்க, புரோபயாடிக் மற்றும் ப்ரீபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் தூங்குங்கள். குறிப்பாக இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடல் பருமனை தவிர்க்க இது மிக அவசியமாகும்.
- தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு வகையான உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது மிக அவசியமாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ