வாஷிங்டன் சுந்தரை திட்டினாரா ரோஹித் சர்மா? வைரலாகும் வீடியோ!

India vs Bangladesh: கேட்சை பிடிக்க முயற்சிக்காததற்காக ரோஹித் சர்மா வங்கதேசம் அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் கோபமடைந்தார்.  

Written by - RK Spark | Last Updated : Dec 5, 2022, 10:48 AM IST
  • முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வி.
  • 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
  • சொதப்பலான பீல்டிங் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
வாஷிங்டன் சுந்தரை திட்டினாரா ரோஹித் சர்மா? வைரலாகும் வீடியோ!  title=

India vs Bangladesh: வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா பொறுமை இழந்து வாஷிங்டன் சுந்தரை தவறாக பேசத் தொடங்கினார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இந்திய கேப்டன் ரோஹித் வாஷிங்டன் சுந்தரை அவதூறாகப் பேசுவதைக் காணலாம்.  ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா ஸ்டேடியத்தில் வங்கதேசத்திடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் தோல்வியடைந்தது. பங்களாதேஷ் கடைசி விக்கெட் ஜோடியான மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் குவித்து இந்திய அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். 

மேலும் படிக்க | தோனியை கேலி செய்த பாகிஸ்தான் ரசிகர்! அமித் மிஸ்ரா கொடுத்த பதிலடி!

rohti

விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் ஒரு கேட்சையும், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஒரு கேட்சையும் கைவிட்டதால் தோல்வியை தழுவியது.  43வது ஓவரில், ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை மிராஸ் டாப்-எட்ஜ் செய்தார், இது விக்கெட் கீப்பர் பேட்டர் கே.எல்.ராகுலுக்கு எளிதான கேட்ச் ஆனது. இருப்பினும், கேட்சை தவற விட்டார் ராகுல். அடுத்த பந்தில், வாஷிங்டன் சுந்தர் கேட்சை தவற விட்டதால் இன்னொரு வாய்ப்பு பங்களாதேஷ்க்கு கிடைத்தது. ஃப்ளட்லைட் வெளிச்சத்தில் பந்து தெரியாததால் சுந்தர் கேட்ச்சை எடுக்க முயற்சிக்கவில்லை. இதனை தொடர்ந்து கேப்டன் ரோஹித் ஷர்மா சுந்தரை திட்ட தொடங்கினார்.  

இந்தியாவைப் பொறுத்தவரை, கே.எல். ராகுல் 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்களிடம் வீழ்ந்ததால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேட்டிங் செய்வதில் இந்திய வீரர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ரோஹித் கூறினார். “பிட்ச் சற்று சவாலானதாக இருந்தது, பந்து நன்கு திரும்பியது. எப்படி விளையாடுவது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த சாக்குகளும் இல்லை, அத்தகைய நிலைமைகளுக்கு நாங்கள் பழகிவிட்டோம். இந்த சூழ்நிலையில் அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எப்படி பேட்டிங் செய்வது என்பதை நாங்கள் பார்க்க வேண்டும், ”என்று ரோஹித் சர்மா கூறினார்.

மேலும் படிக்க | இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்த் நீக்கம்! காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News