இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட்: முதல் பந்தில் முதல் விக்கெட்!!

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் விக்கெட்டை பறிக்கொடுத்தது.

Last Updated : Nov 16, 2017, 02:11 PM IST
இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட்: முதல் பந்தில் முதல் விக்கெட்!! title=

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் மழை பெய்ததால், ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

உணவு இடைவேளைக்கு பிறகு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது

முதல் ஓவரில் இலங்கை வீரர் லக்மால் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் இந்திய தொடக்க வீரர் ராகுல்(0). இதனால் இந்தியா முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

தற்போது இந்திய வீரர் புஜாரா மற்றும் தவான் ஆடி வருகின்றனர். 

டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே அவுட் ஆனா இந்திய வீரர்கள் :-

1. எஸ். கவாஸ்கர் (மூன்று முறை)
2. சுதிர் நாயக்
3. ஃடபள்யு.வி. ராமன்
4. எஸ்எஸ் தாஸ்
5. ஃடபள்யு ஜாப்பர்
6 கே.எல். ராகுல்

இந்த போட்டி ஸ்டார் போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Trending News