INDvsWI Day 2: இந்திய அணி 308/4; ரஹானே* 75 & ரிஷாப்* 85

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2018, 05:14 PM IST
INDvsWI Day 2: இந்திய அணி 308/4; ரஹானே* 75 & ரிஷாப்* 85 title=

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே 2 போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 3 ரன்கள் பின்தங்கி உள்ளது.

 

அஜிங்கியா ரஹானே* 75(174)மற்றும் ரிஷாப் பன்ட்* 85(120) ரன்களுடன் களத்தில் உள்ளனர். நாளை நடைபெறும் மூன்றாவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆட உள்ளனர். 

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களம் கண்ட இந்திய அணி தொடக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராகுல் 4 ரன்னில் அவுட் ஆக, பின்னர் வந்த புஜாரா 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ப்ரித்வி ஷா ஜோடி சேர்ந்து விளையாடினர். அதிரடியாக விளையாடிய ப்ரித்வி ஷா 53 பந்தில் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

விராட் கோலி அரைசதத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 ரன்கள் எடுத்த அவுட் ஆனார். பின்னர் அஜிங்கியா ரஹானே மற்றும் ரிஷாப் பன்ட் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.


அஜிங்கியா ரஹானே* 50(122) மற்றும் ரிஷாப் பன்ட்* 54(69) இருவரும் அரை சதத்தை கடந்தனர். 

தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 64 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 60 ரன்கள் பின்தங்கி உள்ளது.

 

 


73வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலி, தனது 20 வது அரைசதத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 ரன்கள் எடுத்த அவுட் ஆனார். 

தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி 44 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. அஜிங்கியா ரஹானே* 18(69) மற்றும் ரிஷாப் பன்ட்* 0(1) எடுத்து விளையாடி வருகின்றனர்.

 


தொடக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராகுல் 4 ரன்னில் அவுட் ஆக, பின்னர் வந்த புஜாரா 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ப்ரித்வி ஷா ஜோடி சேர்ந்து விளையாடினர். அதிரடியாக விளையாடிய ப்ரித்வி ஷா 53 பந்தில் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

தற்போது விராட்* 18(20) மற்றும் அஜிங்கியா ரஹானே* 7(8) எடுத்து விளையாடி வருகின்றனர்.


தனது முதல் இன்னிங்க்சை தொடங்கிய இந்திய மூன்று விக்கெட் இழப்புக்கு 23 ஓவர் முடிவில் 121 ரன்கள் எடுத்துள்ளது.

 


இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மே. இந்தியத் தீவுகள், 311 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார்.

95 ஓவர்கள் முடிந்தபோது முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 7 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 295 ரன்கள் எடுத்திருந்தது. ராஸ்டன் 98 ரன்களுடனும், பிஷு 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இன்று ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ராஸ்டன் சதமடித்து, 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்கவே, வெஸ்ட் இண்டீஸ் அணி, 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உமேஷ் யாதவ், அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து இந்தியா, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது. லோகேஷ் ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

 

Trending News