டி20 உலக கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்திய அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாட வெற்றி பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தோல்வியை தழுவியது. இதனால் அரை இறுதி வாய்ப்பை இழக்க நேரிடுமோ என்ற நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இன்றைய போட்டி இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தீபக் ஹுதாவிற்கு பதிலாக அக்சர் படேல் மீண்டும் அணியில் இடம் பெற்றார்.
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்!
டாஸ் என்று பங்களாதேஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்பு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரை சதம் அடித்து அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்று தந்தனர். சூரிய குமார் யாதவ் வழக்கம் போல அதிரடியாக ஆடி 30 ரன்களை குவித்தார். விராட் கோலி கடைசி வரை அவுட் ஆகாமல் 64 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் டி20 உலக கோப்பை போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. இந்திய அணி 20 முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது.
Innings Break!
A solid show with the bat from #TeamIndia!
* for @imVkohli for vice-captain @klrahulOver to our bowlers now!
Scorecard https://t.co/Tspn2vo9dQ#T20WorldCup | #INDvBAN pic.twitter.com/n6VchSoP7v
— BCCI (@BCCI) November 2, 2022
185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பங்களாதேஸ் களமிறங்கியது. லிட்டன் தாஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். பவர்ப்பிளே முடிவில் மழை குறுக்கிட்டது. சிறிது நேரம் நிறுத்தப்பட்ட போட்டி மீண்டும் தொடங்கப்பட்டு 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மழைக்கு பிறகு இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை எடுத்தனர். ராகுலின் ரன் அவுட் மற்றும் அர்தீப்சிங், ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இறுதியில் இந்த போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
.@imVkohli bagged the Player of the Match award as #TeamIndia beat Bangladesh in Adelaide.
Scorecard https://t.co/Tspn2vo9dQ#T20WorldCup | #INDvBAN pic.twitter.com/R5Qsl1nWmf
— BCCI (@BCCI) November 2, 2022
மேலும் படிக்க | கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த நபர்! கடுப்பில் விராட் செய்த காரியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ