இந்தோனேசியா President கோப்பை, தங்கம் வென்றார் மேரி கோம்!

இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.

Last Updated : Jul 28, 2019, 07:17 PM IST
இந்தோனேசியா President கோப்பை, தங்கம் வென்றார் மேரி கோம்! title=

இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.

குத்துச்சண்டை போட்டியில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற 36 வயது வீராங்கனை மேரி கோம் இந்தோனேசியா லபுயான் பஜோவில் நடைபெற்ற 23-வது பிரசிடென்ட் கோப்பைக்கான போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

51 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஏப்ரில் பிரான்ங்ஸ்-ஐ எதிர்கொண்ட மேரி கோம், இப்போட்டியில் 5-0 என எளிதாக வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

போட்டியின் வெற்றியை தொடர்ந்து மேரி கோம் தெரிவிக்கையில்., விரைவில் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடர் வருகிறது. உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கு தயாராகும் வகையில் அவருக்கு இந்த வெற்றி ஊக்கத்தை கொடுத்துள்ளது." என தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான 2019 உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்ஸ் செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ரஷியாவில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக விளையாடினால் 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News