உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 14-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது!
உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என ஆசிய நாட்டு அணிகள் உள்பட 10 அணிகள் இத்தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இத்தொடரின் 14-வது லீக் ஆட்டம் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
தற்போது இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடுகிறது. தற்போது வரை நடந்துமுடிந்துள்ள போட்டிகளின் வெற்றி அடைப்படையில் புள்ளிப் பட்டியலில் இந்தியா 2 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது. தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணி இன்றைய போட்டியில் இந்தியாவுடன் வெற்றி பெருமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
--- இன்றைய போட்டியில் எதிர்பார்ப்புகள் ---
- உலக கோப்பை தொடர் போட்டிகளை பொருத்தவரையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதியதில் ஆஸ்திரேலியா 8 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
- லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் கடந்த 1999-ல் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலியா 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் இந்தியாவின் குல்தீப் யாதவ், மற்ற வீரர்களை காட்டிலும் ஆதிகம் செலுத்தி வருகின்றார். அவரது ஆதிக்கம் இன்றைய போட்டியில் தொடருமா என்பது?...
- ஆஸ்திரேலியோவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித் கடந்த 7 இன்னிங்ஸ்களில் பெற்ற ரன்கள் (உலக கோப்பை தொடர் போட்டி) : 95, 72, 65, 105, 56*, 18 & 73. ஸ்மித்தின் அதிரடி இன்றைய போட்டியில் எப்படி அமையும்?