இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி (Indian Team), 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கிறது.
ALSO READ | U19 Asia Cup: இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா
மேலும், தென்னாப்பிரிக்காவில் 2 டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சிறப்பையும் இந்திய அணி பெற்றது. டெஸ்ட் போட்டியில் 7 -வது சதத்தை கே.எல் ராகுல் பதிவு செய்தார். முகமது சமி 200 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய சாதனை பந்துவீச்சாளர்களின் லிஸ்டில் இடம்பிடித்தார்.
ALSO READ | India Win: முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி..!
இந்த சாதனைகள் ஒருபுறமிருக்க, வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெதுவாக பந்துவீசியதால் டெஸ்ட் சாம்ப்யன்ஷிப்பிற்கான ஒரு புள்ளியை குறைத்து, வீரர்களின் ஊதியத்தில் 20 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR