#INDvSA: நாளை முதல் ஒருநாள் போட்டி; ஏபிடி வில்லியர்ஸ் விலகல்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை முதல் தொடங்க உள்ளது. 

Last Updated : Jan 31, 2018, 03:30 PM IST
#INDvSA: நாளை முதல் ஒருநாள் போட்டி; ஏபிடி வில்லியர்ஸ் விலகல் title=

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் கோப்பையை இழந்தது இந்திய அணி.

இந்நிலையில், நாளை(பிப்.1) முதல் ஆறு ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ICC-2017 சிறந்த வீரர் விருதுக்கு விராட் கோலி தேர்வு!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது தற்போது சர்வதேச ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா அணியும், 119 புள்ளிகளுடன் 2_வது இடத்தில் இந்திய அணியும் உள்ளது. ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும். 

தென்னாப்பிரிக்காவில் தொடரும் தோல்வி முகம் -டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா

அதேபோல, தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஏபிடி வில்லியர்ஸ் காயம் காரணமாக முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை டர்பன் மைதானத்தில் முதல் ஒரு போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Trending News