கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஐபிஎல் டி20 சீசன் 10 போட்டியில் இன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது. இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனது பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் மூன்று ஓவரில்(2.5) 3 விக்கெட்களை இழந்தது. அதாவது 21 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தத்தளித்து. பிறகு களம் இறங்கிய யூசப் பதான், அவருடன் ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே இருவரும் தங்கள் அதிரடியால் டெல்லி அணியின் பவுலர்களை நிலைகுலை வைத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய யூசப் பதான் 39 பந்தில் 59 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டிரியும், 2 சிக்ஸ்ரும் அடங்கும். பிறகு வந்த சூரியகுமார் யாதவ் 7 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கிரிஷ் வோகேஸ் 3 ரன்கள் எடுத்த போது ஸ்டெம் அவுட் ஆனார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய மனிஷ் பாண்டே 49 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டிரியும், 3 சிக்ஸ்ரும் அடங்கும். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருடன் சுனில் நரேன் 1 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
20வது ஓவரில் கொல்கத்தா அணி விக்கெட் 7 இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.