ஐபிஎல் 2017: முதல் லீக் போட்டியில் ஹைதராபாத் அபார வெற்றி

Last Updated : Apr 8, 2017, 03:49 PM IST
ஐபிஎல் 2017: முதல் லீக் போட்டியில் ஹைதராபாத் அபார வெற்றி title=

10வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது. 

1990களில் இந்திய கிரிக்கெட்டை கலக்கிய சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன் உள்ளிட்ட ஜாம்பவான் கிகரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடக்க விழாவில் மரியாதை கொடுக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. பெங்களூரு அணி 'டாஸ்' வென்றது. அந்த அணியின் கேப்டன் வாட்சன் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி தொடக்கத்தில் இருந்து ரன் வேட்டையாடியது. தொடக்க வீரரான அந்த அணியின் கேப்டன் வார்னர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹென்ரிக்ஸ் அதிரடியாக விளையாடினார். ஷிகர் தவண் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பின்னி பந்தில் வெளியேறினார்.

இதையடுத்து ஹென்ரிக்ஸூடன் இணைந்த யுவுராஜ் அதிரடியில் மிரட்டினார். ஹென்ரிக்ஸ் 37 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் யுவராஜ் சிங் 27 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 புண்டரிகளுடன் 62 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.

208 ரன்களுடன் பேட் செய்த பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், மன்தீப் சிங் சிறந்த தொடக்கம் கொடுத்தனர். 5 ஓவர்களில் 48 ரன்கள் சேர்க்கப்பட்டது. 6-வது ஓவரில் மன்தீப் சிங் 16 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா வீசிய அடுத்த ஓவரில் கெய்ல் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய கேதார் ஜாதவ் 31, டிரெவிஸ் ஹெட் 30, சச்சின் பேபி 1, ஸ்டூவர்ட் பின்னி 11, வாட்சன் 22, ஸ்ரீநாத் அர்விந்த் 0, டைமல் மில்ஸ் 6, யுவேந்திரா சாஹல் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனால் ஹைதராபாத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 

Trending News