வெல்லப்போவது யார்? டெல்லி - பஞ்சாப் இடையே இன்றைய போட்டி!

டெல்லி கேப்பிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெறும் IPL லீக் 13-வது போட்டி இன்று இரவு 8 மணியளவில் மொஹாலி பிந்திரா மைதானத்தில் துவங்குகிறது!

Last Updated : Apr 1, 2019, 07:33 PM IST
வெல்லப்போவது யார்? டெல்லி - பஞ்சாப் இடையே இன்றைய போட்டி! title=

07:32 PM 01-04-2019
டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!


டெல்லி கேப்பிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெறும் IPL லீக் 13-வது போட்டி இன்று இரவு 8 மணியளவில் மொஹாலி பிந்திரா மைதானத்தில் துவங்குகிறது!

IPL 2019 தொடரின் 13-வது லீக் ஆட்டம் இன்று மொஹாலி பிந்திரா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழக வீரர்  ரவிசந்திர அஸ்வின் தலைமையிலான லெவன் பஞ்சாப் அணியும் , ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 

இன்றைய போட்டியை பொறுத்தவரையில் பஞ்சாப் அணி., முருகன் அஷ்வின் பந்துவீச்சை நம்பி களம் காணுகிறது எனலாம். வெறும் 5 பந்துவீச்சாளர்களை மட்டும் அணியில் வைத்துக்கொண்டு களமிறங்கும் பஞ்சாப் அணி, வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ள டெல்லி அணியின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தவில்லை என்றால் வெற்றி இலக்கை அடைவது கடினம் தான்.

டெல்லி அணியின் கடந்த போட்டியில் சூப்பர் ஓவருக்கு இடமளிக்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் தங்கள் அணியில் நான்கு மாற்றங்களை செய்துள்ளனர். அந்த வகையில் இன்றைய அணியில் சந்தீப் லமிச்சான்னே, ஹனுமன் விகாரி, ஹர்ஷல் பட்டேல் மற்றும் கிறிஸ் மோறிஸ் இடம்பெற்றுள்ளனர்.

அணி விவரம்...

  • கிங்ஸ் லெவன் பஞ்சாப்: லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், சப்ரஸ் கான், மந்தீப் சிங், ஹார்டூர் விலிஜோன், ரவிச்சந்திர அஷ்வின், முருகன் அஷ்வின், மொகமது ஷமி, ஆண்டிரிவ் டை, கருண் நாயர், சிம்ரான் சிங்க், நிக்கோலஸ் பூரண், முஜீப் உர் ரகுமான்.
  • டெல்லி கேப்பிடல்ஸ்: பிரித்திவி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷாப் பன்ட், கோலிங்கிராம், ஹனுமான் விகாரி, கிறிஸ் மோறிஸ், சந்தீப், ரபாடா, பெய்ன்ஸ், அக்சல் பட்டேல், மன்ஜோட் கல்ரா, கீமோ பவுள், செரிப்பென் ரூத்தர்போர்ட், கோலின் முன்றோ, ஜலால் சக்சேனா, ராகுல் திவேட்டி, அவிஸ் கான், இஷான்த் ஷர்மா, நாத்து ஷிங், பண்டாரு அய்யப்பா.

Trending News