வன்முறை பதட்டங்களுக்கு மத்தியில் Jo Biden பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் America

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்புக்கு முன்னதாக அனைத்து அரசாங்க கட்டிடங்களும் உயர் பாதுகாப்பில் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2021, 12:07 PM IST
  • ஜனவரி 20 ஆம் தேதி ஜோ பைடனின் பதவியேற்பு விழா நடக்கவுள்ளது.
  • ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டங்கள் நடக்கக்கூடும் என FBI எச்சரிக்கை.
  • அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வன்முறை பதட்டங்களுக்கு மத்தியில் Jo Biden பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் America  title=

சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்க கேபிட்டலில் நடந்த வன்முறைக்குப் பின்னர், வாஷிங்டனில் பதட்டமும் அச்சமும் உள்ளது. எப்போது என்ன கலவரம் வெடிக்குமோ என்ற கவலை பொது மக்கள், அரசாங்கம், பாதுகப்பு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கு இடையிலும் காணப்படுகின்றது.

ஜனவரி 20 ஆம் தேதி ஜோ பைடனின் பதவியேற்பு விழா நடக்கவுள்ள நிலையில், வாஷிங்டனில் தேசிய காவலர் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களின் பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் வந்திறங்கியுள்ளனர்.

பதவியேற்பைப் பாதுகாக்கும் சேவை உறுப்பினர்களிடமிருந்தே உள் தாக்குதல் அல்லது பிற அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அமெரிக்க (America) பாதுகாப்பு அதிகாரிகள் கவலைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை நடக்கவிருக்கும் அடுத்த அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக மற்ற மாநில தலைநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், "உள் தாக்குதல்" அறிக்கைகளுக்கு மத்தியில் FBI தேசிய காவல்படையினரை சோதனை செய்து வருகிறது.

ALSO READ: America-வில் கோலம்: Joe Biden, Kamala Harris பதவியேற்பு விழா ஏற்பாடுகளில் அசத்தும் கோலங்கள்

ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டங்கள் நடக்கக்கூடும் என FBI எச்சரித்த பிறகு, பல மாகாணங்கள் தங்கள் சட்டசபை மற்றும் முக்கிய கட்டிடங்களில் பாதுகாப்பில் அதிக அளவிலான தேசிய காவல்படை துருப்புக்களை நிறுத்தியுள்ளன. ட்ரம்ப் வாக்காளர் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டிய மாகாணங்களில் தலைநகரங்கள் குறிப்பாக அதிக எச்சரிக்கையுடன் உள்ளன.

டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஆதரவாளர்களின் ஒரு சிறிய குழு லான்சிங்கில் மிச்சிகன் மாநில தலைநகருக்கு வெளியே கூடியது. அந்த எதிர்ப்பாளர்களில் நான்கு பேர் நீண்ட துப்பாக்கிகளை ஏந்திச் சென்றனர். கொலம்பஸில், அரசாங்கத்திற்கு எதிரான குழுவான பூகலூ பாய்ஸ் குழு, ஓஹியோ மாநில சட்டசபைக்கு வெளியே கூடியிருந்தனர்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் (Joe Biden) பதவியேற்புக்கு முன்னதாக அனைத்து அரசாங்க கட்டிடங்களும் உயர் பாதுகாப்பில் உள்ளன. தென் கரோலினாவின் ஸ்டேட்ஹவுஸில் பலர் அமெரிக்கக் கொடிகளை ஏந்தி கூட்டமாகக் கூடி கோஷங்களை எழுப்பினர். இந்த குழுவில் டிரம்ப் ஆதரவாளர்களும் இருந்தனர். இந்த குழு அங்கு கூடியிருந்த மற்றொரு குழுவுடன் உரையாடலில் ஈடுபட்டது. பைடனின் பதவியேற்புக்கு முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்களின் இப்படிப்பட்ட மேலும் பல குழுக்கள் ஆங்காங்கே கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மைக் பென்ஸ் துணை அதிபருக்கான தனது பதவிக்காலத்தில் இறுதியாக ஒரு முறை அமெரிக்க துருப்புக்களை பார்வையிட்டார்.

ALSO READ: அடுத்த வாரம் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப் எங்கு செல்வார்?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News