8 அணிகள் பங்கேற்கும் IPL கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடக்கம்!

சென்னையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 9, 2021, 07:08 AM IST
8 அணிகள் பங்கேற்கும் IPL கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடக்கம்! title=

புது டெல்லி: IPL 2021 MI v RCB: 8 அணிகள் கொண்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளனர். 

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த சரவெடி போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இ்ந்தியாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவல் உச்சத்தில் இருந்ததால் 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

Also Read | IPL 2021: CSK-வை வீழ்த்த நான்கு முக்கிய டிப்ஸ் அளித்தார் DC coach ரிக்கி பாண்டிங்

இந்நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராவிட்டாலும் ஐ.பி.எல். (IPL 2021) போட்டி மீண்டும் அதன் தாயகமான இந்தியாவுக்கு திரும்புகிறது. இதன்படி 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று முதல் மே 30-ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொண்ட ஆமதாபாத்தில் மே 30-ஆம் தேதி அரங்கேறுகிறது. 

வழக்கமாக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர் மைதானங்களில் 7 லீக் ஆட்டங்கள் நடத்தப்படும். இது தான் அந்த அணிக்கும் சாதகமான அம்சமாக இருக்கும். ஆனால் முதல்முறையாக இந்த சீசனில் எந்த அணிக்கும் தங்களது சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது. உதாரணமாக சென்னை சேப்பாக்கத்தில் மொத்தம் 10 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஆனால் சென்னை அணிக்கு இங்கு ஒரு ஆட்டமும் கிடையாது. 

கொரோனா எதிரொலியாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சீசனிலும் ரசிகர்களின் ஆரவாரத்தை பார்க்கும் வாய்ப்பு இல்லை. பூட்டிய மைதானத்திலேயே ஆட்டங்கள் நடக்க உள்ளன. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதில் இணைந்துள்ள வீரர்கள் மற்றும் பயிற்சி குழுவினர், நிர்வாகிகள் எந்த காரணத்தை கொண்டும் கொரோனா விதிமுறைகளை மீறக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இ்ந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், ஜேம்ஸ் நீஷம், குருணல் பாண்ட்யா, நாதன் கவுல்டர்-நிலே அல்லது ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், முகமது அசாருதீன், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமிசன், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ALSO READ: உலகக் கோப்பை 2011 வெற்றியின் பத்து ஆண்டுகள் நிறைவு: எண்ணிப் பார்த்து மகிழும் Yuvraj Singh

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News