பட்லரின் அதிரடியில் வீழ்ந்த மும்பை - தொடர்ச்சியாக 2வது தோல்வி

பட்லரில் அதிரடியில் வீழ்ந்த மும்பை, இந்த ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 2, 2022, 08:20 PM IST
  • மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தோல்வி
  • ராஜஸ்தான் அணி அபார வெற்றி
  • வெற்றிப் பாதைக்கு திரும்புமா மும்பை?
பட்லரின் அதிரடியில் வீழ்ந்த மும்பை - தொடர்ச்சியாக 2வது தோல்வி title=

ஐபிஎல் 2022-ன் 9வது போட்டியில் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மேலும் படிக்க | சர்வதேச கிரிக்கெட் ஓய்வு முடிவை திரும்ப பெற்ற பஞ்சாப் கிங்ஸ் வீரர்

மும்பையின் 2வது தோல்வி

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது, இதற்கு முன்பு டெல்லி அணி மும்பையை வீழ்த்தியது. கேப்டன் ரோஹித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழக்க, இளம் வீரர் திலக் வர்மா 61 ரன்களும், இஷான் கிஷான் 54 ரன்களும் எடுத்தனர். இந்த இரண்டு பேட்ஸ்மேன்களைத் தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களாலும் பெரிதாக விளையாடவில்லை. 

பட்லர் சிறப்பான சதம் 

முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர், இன்று மும்பை பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 68 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். ஐபிஎல் தொடரில் அவரின் இரண்டாவது சதமாகும். கேப்டன் சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 30 ரன்களும், ஷிம்ரோன் ஹெட்மையர் 14 பந்துகளில் 35 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை 193 ரன்களுக்கு கொண்டு சென்றனர்.

பும்ரா பந்துவீச்சு

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். பும்ரா 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரின் சிறப்பான பந்துவீச்சால் ராஜஸ்தான் அணியை 200 ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது. இதேபோல், டைமல் மில்ஸூம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜஸ்தான் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளையும், மும்பை 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 

மேலும் படிக்க | 19 பந்துகளில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் பந்துவீச்சாளர் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News