நேற்று நடந்த ஐபிஎல் 2022 போட்டியில், முன்னாள் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். குறிப்பாக கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தில் ஒரு சூப்பர் பவுண்டரி அடித்து இந்த போட்டியை வெற்றி பெற செய்தார். இது தோனி ரசிகர்களை தாண்டி இணையத்தையே கொண்டாட செய்தது. மகேந்திர ஓனர் ஆனந்த் மகேந்திர தொடக்கி, பல்வேறு விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் தோனியை பாராட்டினர்.
Tweets galore as MS Dhoni finishes things off in style! #TATAIPL pic.twitter.com/W4Svmumyln
— IndianPremierLeague (@IPL) April 21, 2022
மேலும் படிக்க | தோனியின் அதிரடியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
போட்டிக்குப் பிறகு, சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா, தோனியின் மேட்ச்-வின்னிங்ஸ் இன்னிங்ஸைப் பாராட்டும் விதமாக அவர் முன் தொப்பியைக் கழட்டி தலை வணங்கினார். அதனை தொடர்ந்து அம்பதி ராயாடு தோனியை தனது இரு கைகளால் வணங்குவது போல தனது பாராட்டை தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Nobody finishes cricket matches like him and yet again MS Dhoni 28* (13) shows why he is the best finisher. A four off the final ball to take @ChennaiIPL home.
What a finish! #TATAIPL #MIvCSK pic.twitter.com/oAFOOi5uyJ
— IndianPremierLeague (@IPL) April 21, 2022
ஐபிஎல் 2022 போட்டிகள் ஆரம்பித்து 32 போட்டிகள் நிறைவடைந்து இருந்தாலும் அனைவரும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டிக்காக காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது. சென்னை, மும்பை என இரண்டு ஜாம்பவான் அணிகளும் புள்ளிபட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருந்தனர். இந்த இரண்டு பேரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும், சென்னை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால், மும்பை விளையாடிய 6 போட்டியில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
டாஸ் வென்று சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்ய மும்பை அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷன் மற்றும் ரோஹித் இருவரும் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க அங்கேயே போட்டி முடிந்தது. பின்பு மற்ற வீரர்கள் ரன்கள் அடிக்க மும்பை 155 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கு என்றாலும் சென்னை அணியின் பேஸ்ட்மேன்களும் ஆரம்பத்தில் தடுமாறினர். மும்பையின் சிறப்பான பவுலிங்கால் சென்னை அணியின் ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்து இருந்தனர். இருப்பினும் தோனியின் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | சிஎஸ்கேவில் இருந்து முக்கிய வீரர் விலகல் - இலங்கை இளம் வீரர் சேர்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR