ஐபிஎல் சீசனின் இன்றைய எலிமினேட்டர் சுற்று போட்டிகள் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மர்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோற்றுப் போனது.
ஐபில் எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது... போட்டியில் தோற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் 2021 தொடரில் இருந்து வெளியேறியது.
Eliminator. It's all over! Kolkata Knight Riders won by 4 wickets https://t.co/LJ5vlF162I #Eliminator #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) October 11, 2021
கேப்டன் விராட் கோலியின் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கடைசி ஐபிஎல் தொடர் இது என்பதால், அவரது அணி வெற்றி பெற வேண்டும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் ஆசை, நிராசையானது.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதலில் மட்டை வீச முடிவெடுத்தது. முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய பெங்களூரு அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, மற்றும் கேஎஸ் பாரத் ஆகியோர் வெளியேறியதால் பெங்களூரு அணியின் ரன்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.
Also Read | 'தகுதி - எலிமினேட்டர்' அழுத்தத்தை உருவாக்க உருவாக்கப்பட்டது: விராட்
அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் அருமையாக ஆடினாலும், தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டம் பரபரப்பானதாக மாறியது.
யார் போட்டித்தொடரில் இருந்து வெளியேறுவார்கள், யார் அடுத்தகட்டத்திற்கு செல்வார்கள் என்பது இறுதி வரை யாராலும் யூகிக்கவே முடியவில்லை. ரசிகர்களை நாற்காலி நுனியில் அமர வைத்த போட்டிகளில் ஒன்று இன்றைய எலிமினேட்டர் போட்டி என்று சொல்லலாம்.
15 பந்தில் 26 ரன்கள் எடுத்த சுனில் நரைன். கேம் சேஞ்சர் ஆஃப் த மேட்ச் 117 பேண்டசி பாயிண்டுகள் பெற்ற சுனில் நரைனுக்கு கிடைத்தது. சூப்பர் சிக்சர் விருதும் சுனில் நரைனுக்கே. அவரது சூப்பர் சிக்ஸர் மூன்று அணிக்கு உதவியாக இருந்தது. சுனில் நனைனுகு அதிக மதிப்புள்ள வீர்ர் என்ற விருதும் கொடுக்கப்பட்டது.
பெர்பக்ட் கேட்ச் ஆஃப் த மேட்ச், சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதை பெற்றார். கிரேட் ப்ளேயர் ஆஃப் த மேட்ச் விருதை பெற்றார் ஷுப்மன் கில்.
போட்டியின் நடுவர்கள்: நியூசிலாந்தின் கிறிஸ் காஃபனி மற்றும் இந்தியாவின் வீரேந்தர் சர்மா. தொலைக்காட்சி நடுவர்: இந்தியாவின் அனில் சவுத்ரி. போட்டி நடுவர்: இந்தியாவின் மனு நய்யார்
ALSO READ | தோனியின் ஆட்டம் குறித்து புகழ்ந்த விராட் கோலி; வைரலாக போஸ்ட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR