CSK Vs RR: சம பலம் கொண்ட இரு அணிகள்.. அனல்பறக்கும் இன்றை ஆட்டம்.. வெற்றி யாருக்கு?

IPL 2023 CSK Vs RR Match Preview: இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரின் 17வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 12, 2023, 05:43 PM IST
  • ஐபிஎல் 2023 புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • இதுவரை 26 முறை ராஜஸ்தான் மற்றும் சென்னை நேருக்கு நேர் மோதியுள்ளன.
  • ஐபிஎல் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் தோனி.
CSK Vs RR: சம பலம் கொண்ட இரு அணிகள்.. அனல்பறக்கும் இன்றை ஆட்டம்.. வெற்றி யாருக்கு? title=

Chennai Super Kings vs Rajasthan Royals: இந்த சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தனது நான்காவது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியை இன்று (ஏப்ரல் 12) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் சிறப்பான பார்மில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் வெற்றிக் குதிரையில் சவாரி செய்து வருவதால், இன்று ஏதாவது ஒரு அணி தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஐபிஎல் 2023 புள்ளி பட்டியல்:
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் லக்னோ அணி உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றியை சூடும் அணி முதலிடத்திற்கு முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 

சென்னை vs ராஜஸ்தான்: அதிக போட்டியில் வெற்றி யாருக்கு?
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 26 ஆட்டங்களில் 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளின் தொடக்க வீரர்களும் சிறப்பான பார்மில் உள்ளனர். சென்னை அணிக்காக ரிதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லரும் சிறந்த பார்மில் காணப்படுகிறார்.

மேலும் படிக்க: தோனி செய்யப்போகும் மிகப்பெரும் சாதனை... காத்திருக்கும் சேப்பாக்கம்!

இன்றைய போட்டி தொடங்கும் நேரம் மற்றும் இடம்:
இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 12, மாலை 7:30 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும் மற்றும் ஜியோசினிமாவில் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யப்படும்.

சேப்பாக்கம் பிட்ச் நிலவரம்:
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தின் ஆடுகளம் சுழல் தாக்குதலுக்கு சற்று உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும் அதற்கான வியூகங்களை இருஅணிகளும் வகுக்கலாம். வானிலை பொறுத்தவரை, சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், மழை பெய்ய வாய்ப்பு 4 சதவீதமாகவும் இருக்கிறது. 

மேலும் படிக்க: 'இது முத்துப்பாண்டி கோட்டை' இன்று சிஎஸ்கே ஜெயிக்கவே அதிக வாய்ப்பு... எப்படி தெரியுமா?

இந்த போட்டி தோனிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது:
இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 200வது போட்டியில் ஆடுவார். தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளது. தோனியின் தலைமையில் சிஎஸ்கே 9 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. தோனி இதுவரை 199 போட்டிகளில் சிஎஸ்கே கேப்டனாக இருந்துள்ளார். இதில் சென்னை அணி 120 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி, சிஎஸ்கே மற்றும் ஆர்ஆர் போட்டியில் மற்றொரு சாதனையை படைக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்த 11 பேர் விளையாடலாம் (கணிப்பு)

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings): எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, மிட்செல் சான்ட்னர், ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals): சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

மேலும் படிக்க: ஐபிஎல்ல விளையாட உடற்தகுதி அவசியம்! சிஎஸ்கே வீரரை கடுமையாக சாடும் சாஸ்திரி! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News