இன்னும் சென்னை அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறதா?

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அபார வெற்றி பெற்றது.    

Written by - RK Spark | Last Updated : May 9, 2022, 04:18 PM IST
  • ஐபிஎல் 2022 போட்டிகள் முடியும் நிலைக்கு வந்துள்ளது.
  • குஜராத், லக்னோ அணிகள் கிட்டத்தட்ட தகுதி பெற்றுள்ளன.
  • மும்பை அணி பிளே ஆப்பில் இருந்து வெளியேறி உள்ளது.
இன்னும் சென்னை அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறதா?  title=

ஐபிஎல் 2022 போட்டியில் சாம்பியன் அணிகள் என்று சொல்லக்கூடிய சென்னை, மும்பை அணிகள் மிகவும் மோசமாக விளையாடி புள்ளி பட்டியலில் 9 மற்றும் 10வது இடத்தில் இருந்தன.  புதிய அணிகளாக உள்ளே வந்த குஜராத் மற்றும் லக்னோ சிறப்பாக விளையாடி முதல் இரண்டு இடங்களை தக்க வைத்து கொண்டன.  கிட்டத்தட்ட பிளே ஆப்பிற்கு இந்த இரண்டு அணிகளும் தகுதி பெற்றுள்ளன.  இரண்டு அணிகளும் இதுவரை தலா 11 போட்டிகளில் விளையாடி 8ல் வெற்றி பெற்று, 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

மேலும் படிக்க | தொடர் வெற்றிக்குப் பிறகு வருந்தும் தோனி - மனக்குமுறலுக்கு காரணம் இதுதான்

அடுத்ததாக ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றுள்ளன.  இதில் ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 3 போட்டியும், பெங்களூரு அணிக்கு 2 போட்டியும் உள்ளது.   அடுத்த 5, 6,7 வது இடங்களில் டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அபார வெற்றி பெற்றதால் 9வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.  இந்த வருட பிளே ஆப்பில் இருந்து மும்பை அணி மட்டுமே அதிகார்வப்பூர்வமாக வெளியேறி உள்ளது.

கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் தலா 8 புள்ளிகளுடன் இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் சென்னை ஒரு இடம் முன்னே உள்ளது.  சென்னை அணிக்கு மீதமுள்ள 3 போட்டிகளில், மும்பை, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுடன் விளையாட உள்ளது.  இந்த மூன்று போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றாலும், 14 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்.  ஆனால், பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் 16 புள்ளிகள் பெற்றுவிடும்.  இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளில் ஒன்று அல்லது இரண்டில் வெற்றி பெற்று இருந்தாலும் கூட தற்போது சென்னை அணிக்கு கூடுதல் வாய்ப்பு இருந்து இருக்கும்.  தற்போது உள்ள சூழ்நிலையில் பிளே ஆப் வாய்ப்பு கனவாக மட்டுமே உள்ளது.

மேலும் படிக்க | ஜடேஜாவை அணியில் இருந்து வெளியேற்றிய தோனி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News