ஐஎஸ்எல். 2016 கால்பந்து: சென்னை எப்சி வெற்றி

Last Updated : Nov 16, 2016, 11:58 AM IST
ஐஎஸ்எல். 2016 கால்பந்து: சென்னை எப்சி வெற்றி title=

சென்னையில் நேற்று நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி புனேயை வீழ்த்தி வெற்றியை பெற்றது.

8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி, புனே சிட்டி அணிகள் மோதின. 

இந்த மோதலில், இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை கொடுத்தது. 44-வது நிமிடத்தில் சென்னை அணி கோல் அடித்தது. முதல் பாதியில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பின் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்னை அணி 2-வது கோலை போட்டது. 

முடிவில் சென்னையின் எப்.சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் புனேயை தோற்கடித்து வெற்றியை பெற்றது. 

 

Trending News