ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து மூன்றாவது சீசன் போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன.
சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா , நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி . ஆகிய 8 அணிகள் ஆகும்.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
நேற்று டெல்லி அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் கொல்கத்தா ஒரு கோல் போட்டிருந்தது. பின் பாதியில் டெல்லி அணியினர் தங்கள் வேகத்தை கூட்டினர். டெல்லி அணி ஒரு கோல் போட்டது. பிறகு கொல்கத்தா ஒரு கோல் போட்டது.
கொல்கத்தா இரண்டும் கோலும், டெல்லி அணி ஒரு கோலும் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தனர். ஆட்டம் முடிவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாக டெல்லி அணியனர் ஆக்ரோசமாக ஆடினர். இதன் பலனாக டெல்லி அணி கடைசியாக 1 கோலை போட 2-2 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனது.
.@DelhiDynamos' solidify their position at the top of the #HeroISL Standings after securing a hard-fought point! #DELvATK #LetsFootball pic.twitter.com/kchoZpWRph
— Indian Super League (@IndSuperLeague) November 13, 2016