மிக விரைவில் 100 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பூம்ரா...

மிககுறைந்த ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்னும் பெருமையினை ஜாஸ்பிரிட் பூம்ரா பெற்றுள்ளார்.

Last Updated : Jul 6, 2019, 08:08 PM IST
மிக விரைவில் 100 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பூம்ரா...

மிககுறைந்த ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்னும் பெருமையினை ஜாஸ்பிரிட் பூம்ரா பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 44-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியின் 4-வது ஓவரில் இலங்கையின் திமுத் கர்ணரத்னே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 25-வயது இளம் பந்துவீச்சாளர் இந்த சாதனையினை படைத்துள்ளார்.

குறிப்பிட்ட இந்த ஓவரில் மூன்று பந்துகளை எதிர்கொண்ட கர்ணரத்னே, நான்காவது பந்தில் தனது விக்கெட்டை மகேந்திர சிங் தோனி வசம் விட்டுச் சென்றார். 

கர்ணரத்னே விக்கேட்டை தொடர்ந்து இலங்கையின் குஷல் பெராரா (18) மற்றும் ஆங்கிலோ மேத்திவ்ஸ் (113) விக்கெட்டுகளையும் பூம்ரா வீழ்த்தினார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 102 விக்கெட்டுகளை பூம்ரா வீழ்த்தியுள்ளார்.

தனது 57-வது போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ள பூம்ரா, குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்னும் பெருமையினை பெற்றார். இவருக்கு முன்னதாக 56 போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மிக குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்னும் பெருமையினை பெற்றார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இப்பட்டியலில் ஜாஸ்பிரிட் பூம்ரா 8-வது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 44 போட்டிகளில் இச்சாதனையினை படைத்து இப்பட்டியலில் முதல் இடம் வகிக்கின்றார். 

நடப்பு உலக கோப்பை தொடரில் மட்டும் பூம்ரா இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 19.75 சராசரியுடன் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News