Harbhajan vs Dhoni: தோனிக்கு எதிராக பகிரங்கமாக பொங்கும் ஹர்பஜன் சிங்! காரணம் என்ன?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங், தற்போது தோனிக்கு எதிராக மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகவே சுமத்துகிறார்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2021, 07:34 AM IST
  • கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஹர்பஜன் சிங்
  • மகேந்திர சிங் தோனி மீது ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டு
  • ரவிச்சந்திரன் அஸ்வினுக்காக நான் விலக்கப்பட்டேன் - ஹர்பஜன்
Harbhajan vs Dhoni: தோனிக்கு எதிராக பகிரங்கமாக பொங்கும் ஹர்பஜன் சிங்! காரணம் என்ன? title=

புதுடெல்லி:  ஹர்பஜன் சிங் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிறகு, ஹர்பஜன் சிங் வெளிப்படையாக தனது குற்றச்சாட்டுகளை கடுமையாகவே பகிரங்கமாக வெளியிட்டார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது ஹர்பஜன் சிங் சுமத்திய குற்றச்சாட்டுகள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த காரணமுமே தெரிவிக்கப்படாமல் தான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதான குற்றச்சாட்டு பல கேள்விகளை எழுப்புகிறது.

2011 உலகக் கோப்பைக்குப் பிறகு ஹர்பஜன் சிங் 10 ஒருநாள் மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2015 உலகக் கோப்பைக்கான அணியிலும் ஹர்பஜன் சிங் சேர்க்கப்படவில்லை. மகேந்திர சிங் தோனியால் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்குள் (Team India) நுழைந்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் வருகையால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஹர்பஜன் சிங்கின் பங்களிப்பு நீக்கப்பட்டது என்று தனது ஓய்வுக்குப் பிறகு, ஹர்பஜன் சிங் தற்போது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹர்பஜன்

தோனி மீது பெரிய குற்றச்சாட்டுகள்

'400 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு வீரரை எப்படி வெளியேற்ற முடியும் என்பது ஒரு மர்மமான கதை, இந்த மர்மம் இன்னும் வெளிவரவில்லை. அது எனக்கு அது இதுவரை ஆச்சரியமாகவே இருக்கிறது.  'என்ன நடந்தது? நான் அணியில் இருப்பதில் யாருக்கு பிரச்சனை?' என்று ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்புகிறார்.

இந்தக் கேள்வியை ஹர்பஜன் சிங், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் (MS Dhoni) கேட்டபோது, அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் ஹர்பஜன் தெரிவித்தார். பதிலைக் கேட்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்த பிறகுதான் தான் கேள்வி கேட்பதை நிறுத்தியதாகவும் கூறுகிறார். 

1998 ஆம் ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஹர்பஜன் சிங், அதே ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். 2006 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார் ஹர்பஜன் சிங். 

ஹர்பஜன் சிங் 2016 முதல் இந்திய அணியில் இடம் பெறவில்லை. தற்போது ஹர்பஜன் சிங், ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒன்றில் முக்கியமான பதவியைப் பெறலாம். அதேபோல, ஐபிஎல் மெகா ஏலத்தில் ஹர்பஜன் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

ஹர்பஜன்

16 ஆண்டுகள் விளையாட்டில் உச்சம்
ஹர்பஜன் சிங் 16 ஆண்டுகள் கிரிக்கெட்டில் விளையாடி வெற்றியும் பெற்றார். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டி20 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 417 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதே சமயம் டி20 சர்வதேசப் போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்பஜன் சிங், 2015ல் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் (Test Match) விளையாடினார். ஹர்பஜன் சிங் கடைசியாக 2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில், தனது கடைசி டி20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார் ஹர்பஜன்.

417 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை

இந்திய அணிக்காக ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 417 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 236 போட்டிகளில் விளையாடி, 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பஜ்ஜி என்று செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜன், இந்தியாவுக்காக 28 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

READ ALSO | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் நியூசிலாந்து வீரர்

2016 ஆம் ஆண்டு, ஹர்பஜன் தனது கடைசி டி20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக ஆசிய கோப்பையில் விளையாடினார். ஐபிஎல்லில் ஹர்பஜன் 163 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். 41 வயதான ஹர்பஜன், இந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருந்தார். இருப்பினும், ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்ட போட்டியில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.  

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி கொல்கத்தாவில் வரலாற்று சாதனை

புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின்னர்களில் ஒருவராக கருதப்படும் ஹர்பஜன் சிங், தனது பந்துவீச்சால் இந்திய அணியை பல போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளார். 2001ல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். 

அப்போது ஹர்பஜனுக்கு 21 வயதுதான், அந்த போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங் இந்திய அணியின் முக்கிய அங்கமாக மாறினார். லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளேவுடன் அவரது ஜோடி, இந்திய அணிக்கு பல வரலாற்று வெற்றிகளைக் கொடுத்துள்ளது. 2000 முதல் 2010 வரை, ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளே ஜோடி இந்திய சுழற்பந்து வீச்சில் வெளுத்துவாங்கியது குறிப்பிடத்தக்கது.  

Also Read | சதமே அடிக்காமல் ஆண்டை முடித்த விராட் கோலியின் மோசமான 2021

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News