இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே). பல ஆண்டுகளாக, எம்.எஸ். தோனியும் அவரது அணியும் ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தி, நான்கு ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளனர். இருப்பினும், ஐபிஎல் 2023-க்கு முன்னதாக, சிஎஸ்கே ஒரு பெரிய அடியை சந்தித்துள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் ஐபிஎல் 2023-ல் இருந்து விலகியுள்ளார்.
வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் சீசனில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிச சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட மாட்டார். CSK-ன் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாளரான தீபக் சாஹரின் உடற்தகுதி குறித்து இன்னும் சில கவலைகள் இருப்பதால், அவர் விலகியிருப்பது சிஎஸ்கே-வுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜேமிசனுக்கு பதிலாக புதிய வீரரை தேர்வு செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டியது. அதில் ஐபிஎல் 2023 ஏலத்தில் விலை போகாத இலங்கையின் தசுன் ஷனகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தசுன் ஷனகாவை தேர்வு செய்ததன் பின்னணியில் 3 காரணங்கள் இருக்கின்றன.
மேலும் படிக்க | நான் நிச்சயம் இந்த ஆண்டு விளையாடுவேன்! அப்டேட் கொடுத்த சிஎஸ்கே வீரர்!
1. ஆல்ரவுண்டர்
தசுன் ஷானகா ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். அவர் நன்றாக பந்துவீசவும் பேட்டிங் செய்யவும் முடியும். மேலும், அவர் ஒரு அனுபவமிக்க வீரர். நடுத்தர வேகத்தில் பந்துவீசவும், மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யவும் முடியும். அவர் சிறந்த பேட்டிங் திறமையைக் கொண்டுள்ளார். குறிப்பாக கடினமான நேரத்தில் அதிரடி ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியும். இக்கட்டான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டவர். இத்தகைய ஆல்ரவுண்ட் திறமை காரணமாக அவர் சிஎஸ்கே அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது வருகை ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் பென்ஸ்டோக்ஸூக்கு பலமாக இருக்கும்.
2. டி20-ல் அனுபவம்
டி20 சுற்றுகளில், தசுன் ஷனகா ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறுகிய வடிவத்தில், அவர் 178 ஆட்டங்களில் விளையாடி 142.45 ஸ்ட்ரைக் ரேட்டில் 3674 ரன்கள் குவித்துள்ளார். 31 வயதான அவர் சர்வதேச அளவிலும் சிறந்து விளங்கினார். 85 டி20 சர்வதேச போட்டிகளில் 121.83 ஸ்ட்ரைக் ரேட்டில் 1328 ரன்கள் எடுத்துள்ளார்.
3. இக்கட்டான சூழல்
இளம் வீரராகவும், அனுபவம் இருப்பதாலும் தசுன் ஷானகாவின் திறமையை பயன்படுத்திக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவெடுத்துள்ளது. நீண்ட நாட்கள் சென்னை அணியில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பது இன்னொரு காரணம். இலங்கை அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது தசுன் ஷானகாவின் பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாக இருந்துள்ளது. இது சிஎஸ்கேவுக்கு முக்கியமான தருணத்தில் கை கொடுக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்பார்க்கிறது.
மேலும் படிக்க | சிஎஸ்கே அணியில் இணைந்த மற்றொரு இலங்கை வீரர்! யாருக்கு பதிலாக தெரியுமா?
மேலும் படிக்க | IPL 2023: முக்கிய வீரர் மீண்டும் காயம்! சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு!
மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ