மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படத்திய விராட் கோலி, ‘டி20 ஆண்கள் தரவரிசை’ பட்டியலில் 10-ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் விராட் கோலி இந்த இடத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் 94(50), இரண்டாம் போட்டியில் 19(17) மற்றும் மூன்றாம் போட்டியில் 70*(29) ரன்கள் குவித்தார். இதன் மூலம் தற்போது டி20 போட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 685 புள்ளிகளுடன் 10-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Click Here - மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க...
இப்பட்டியிலில் விராட் கோலி 10-ஆம் இடத்தில் இருக்கும் போதிலும், 2019-ஆம் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குறைந்த போட்டிகளில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ள விராட் கோலி, மற்ற பேட்ஸ்மேன்களுக்கு ஒரு எடுத்துகாட்டாய் இருக்கின்றார்.
இபட்டியலில் விராட் கோலியை தவிர இந்திய வீரர்கள் லோகஷ் ராகுல் (734 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்தில்), ரோகித் சர்மா (686 புள்ளிகளுடன் 9-ஆம் இடத்திலும்) உள்ளனர்.
சர்வதேச வீரர்களை பொறுத்தவரையில் முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் (879 புள்ளிகள்), இரண்டாம் இடத்தில் அரோன் பின்ச் (810 புள்ளிகள்), மூன்றாம் இடத்தில் டேவிட் மெளன் (782 புள்ளிகள்) உள்ளனர்.
Click Here - மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க...
பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் இந்திய வீரர்கள் தங்கள் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளனர். முதல் 10 இடங்களில் ஒரு இந்திய பந்துவீச்சாளரும் இடம்பெறவில்லை என்பது வேதனை. அதோப்போல் ஆல்-ரவுன்டருக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் யவரும் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளை தவிர டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கின்றார்.