ஆஸி.க்கு எதிரான 3 டி20 போட்டியில் நெஹ்ரா, கார்த்திக், தவான் சேர்ப்பு

Last Updated : Oct 2, 2017, 11:11 AM IST
ஆஸி.க்கு எதிரான 3 டி20 போட்டியில் நெஹ்ரா, கார்த்திக், தவான் சேர்ப்பு title=

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக டி20-யில் ஆஷிஷ் நெஹ்ரா கடைசியாக விளையாடினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டி நேற்று முதிவுக்கு வந்தது. தற்போது மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

 

 

அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ராகுல், பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, அக்சர் படேல்.

Trending News