தூக்க வேண்டியது ரிஷப் பண்டை அல்ல, அவரைதான்! - பகீரங்கமாக அறிவித்த மூத்த வீரர்

ரிஷப் பண்டிற்கு ஓய்வளிக்க வேண்டும் என கருத்துகள் வலுத்துவரும் நிலையில், அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 28, 2022, 11:10 AM IST
  • இந்திய அணியில் தற்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
  • சோபிக்காத வீரர்களுக்கு பதில் வேறு வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தொடர் கோரிக்கை.
தூக்க வேண்டியது ரிஷப் பண்டை அல்ல, அவரைதான்! - பகீரங்கமாக அறிவித்த மூத்த வீரர்

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பின், தேர்வுக்குழு மீதும், உலகக்கோப்பை தொடரில் மட்டுமல்லாது சமீப காலமாக சோபிக்கத் தவறிய வீரர்கள் மீதும் தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்தன. 

அந்த ஒரு பகுதியாக இந்திய சீனியர் ஆடவர் அணியின் மொத்த தேர்வுக்குழு உள்பட அணி நிர்வாகத்தினர் பலரையும் பிசிசிஐ நீக்கியது. நிர்வாகிகள் மட்டுமல்லாது வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த வீரர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

மேலும், அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்திய ஆடவர் அணியில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்தவரும், அதிரடி பேட்டர்களாக அறியப்படும் சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றசாட்டும் உள்ளது. 

மேலும் படிக்க | INDvsNZ: இந்திய அணியின் தோல்விக்கு காரணமான 5 வீரர்கள்

இதற்கு வலுசேர்க்கும் வகையில், நியூசிலாந்து அணியுடனான நேற்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு ஓய்வளிக்கப்ட்டு, தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டார். கூடுதல் பந்துவீச்சாளருக்காக தீபக் ஹூடாவை அணியில் கொண்டுவந்தது நல்லதுதான் என்றாலும், முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் நன்றாக விளையாடியிருந்தார். எனவே, அவருக்கு மற்றொரு விக்கெட்-கீப்பர் பேட்டரும், நீண்ட காலமாக சோபிக்கத் தவறியவருமான ரிஷப் பண்டிற்கு ஓய்வளித்திருக்கலாம் என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. 

தொடர்ந்து, சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துவந்தனர். மாறாக, ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதில் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பளிப்பதில் தவறில்லை என இந்திய அணியின் மூத்த வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,"இந்திய ஒருநாள் அணியின் பேட்டிங் வரிசையில் முதல் ஐந்து இடங்களைப் பார்த்தால், யாரையும் குறைக்கூற முடியாத அளவிற்கு உள்ளது. ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக உள்ளனர். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர், ஒருநாள் போட்டிகளில் அபாரமான ஃபார்மில் உள்ளார். சூர்யகுமார் யாதவை நீக்குவது பற்றி நீங்கள் கனவிலும் கூட நினைக்க முடியாது. 

ரிஷப் பண்ட் அணியின் துணைக் கேப்டனாக உள்ளார். மேலும், ஒருநாள் அரங்கில், அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். எனவே நீங்கள் ஆறாவது பந்துவீச்சாளரைச் சேர்க்க விரும்பினால், சஞ்சு சாம்சன்தான் வெளியே அமரவைக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இல்லாமல் இந்திய அணி விளையாடும்போது, அணி சமநிலையாக இருக்க அதுவே சிறந்த வழி" என்றார். 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. தற்போது, நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நேற்றைய இரண்டாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிக்க | அவருக்கு ஓய்வு கொடுங்கள்! நட்சத்திர வீரருக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News