INDvsNZ: இந்திய அணியின் தோல்விக்கு காரணமான 5 வீரர்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு இந்த 5 வீரர்களே காரணம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 25, 2022, 06:22 PM IST
  • இந்திய அணி தோல்விக்கு காரணம்
  • 5 வீரர்கள் சுட்டிக்காட்டும் ரசிகர்கள்
  • வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா?
INDvsNZ: இந்திய அணியின் தோல்விக்கு காரணமான 5 வீரர்கள் title=

ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 300 ரன்களுக்கு மேல் அடித்தும், நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி சேஸ் செய்துள்ளது. பந்துவீச்சாளர்கள் ஓரளவு பங்களிப்பு செய்திருந்தால், நியூசிலாந்து அணியை வீழ்த்தியிருக்கலாம். ஆனால், எதிர்பார்த்தளவுக்கு இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு இல்லை. 

பேட்டிங்கிலும் இரண்டு முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டானது, இந்திய அணி வலுவான ஸ்கோர் குவிக்க முடியாமல் போனது. அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு துருப்புச்சீட்டாக விளங்கிய 5 வீரர்கள் யார்? என்பதை தெரிந்து கொள்வோம்.   

ரிஷப் பந்த்

ஒருநாள், 20 ஓவர் போட்டிகளில் போதுமான வாய்ப்புகளை பெற்றும் ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நேரத்தில், ரிஷப் பந்த் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் முக்கியமான கட்டத்தில் 15 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். 

மேலும் படிக்க | சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? சோக கதை மூலம் ஷிகர் தவான் விளக்கம்

அர்ஷ்தீப் சிங்

20 ஓவர் தொடரில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு, ஒருநாள் போட்டி சிறப்பாக அமையவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8.1 ஓவர்கள் வீசிய அவர், 68 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இவரின் பந்துவீச்சு எடுபடாமல்போனதும் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணம். 

யுஸ்வேந்திர சாஹல்

அர்ஷ்தீப்பைபோல் சிறப்பாக செயல்முடியாத பந்துவீச்சாளர்கள் வரிசையில் யுஸ்வேந்திர சாஹலும் வருவார். 10 ஓவர்கள் வீசி 67 ரன்களை வாரி வழங்கிய வள்ளல் சாஹல், ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இவர் யாரோ ஒரு வீரரை விக்கெட் எடுத்திருந்தால் கூட போட்டியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. 

ஷர்துல் தாக்கூர்

ஆல்ரவுண்டராக இந்திய அணியில் இருக்கும் ஷர்துல் தாக்கூர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே கோட்டைவிட்டார். பேட்டிங்கில் ஒரு ரன் மட்டுமே எடுத்த அவர், 9 ஓவர்கள் பந்துவீசு 63 ரன்களை நியூசிலாந்து அணிக்கு தாரை வார்த்தார். இவரின் மோசமான செயல்பாடும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. 

சூர்யகுமார் யாதவ்

20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டியில் வெகு சீக்கிரமே விக்கெட்டை பறிகொடுத்தார். இவரது பேட்டிங்கில் ஓரளவு ரன்கள் வந்திருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் இன்னும் கொஞ்சம் உயர்ந்திருக்கும். ஆனால், 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். 

இவர்களின் மோசமான செயல்பாடு இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. 

மேலும் படிக்க | IND vs NZ : 'கப்ப நீயே வச்சுக்க சித்தப்பு...' சிரிப்புமழையில் ஷிகர் தவான், வில்லியம்சன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News