டிவில்லியர்சால் மட்டுமே பும்ராவை எதிர்கொள்ள முடியும் - கம்பீர்

டிவில்லியர்சால் மட்டுமே பும்ராவை எதிர்கொள்ள முடியும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 17, 2021, 11:45 AM IST
டிவில்லியர்சால் மட்டுமே பும்ராவை எதிர்கொள்ள முடியும் - கம்பீர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் க கவுதம் கம்பீர், ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு சிறந்த வீரரை ஏபி டிவில்லியர்ஸ் ஆல் மட்டுமே சமாளிக்க முடியும் என்று கூறியுள்ளார். 

முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனும் தற்போதைய எம்பியுமான கவுதம் கம்பீர் கூறுகையில், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில் எதிரணியில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பல நல்ல வீரர்கள் உள்ளனர்.  ஐபிஎல் 2021 ஒத்திவைப்பதற்கு முன், ஆர்சிபி தனது ஏழு ஆட்டங்களில் ஐந்தில் வென்று, புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது.  கொரோனா அலைக்கு பிறகு மீதமுள்ள போட்டிகள் தொடங்க சில நாட்களே உள்ளன, அதே நேரத்தில் கோலி அணி பட்டியலில் முதல் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  கோலியின் அணியில் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் போன்றவர்கள் உள்ளனர்.  ஒருவர் விளையாடவில்லை என்றாலும் மற்றொரு வீரர் சிறப்பாக ஆடுவர்.  ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒருவரை சமாளிக்க ஆசிபியில் ஏபி டி வில்லியர்ஸ் ஆல் மட்டுமே முடியும்.

abde

கோலியின் ஃபார்முலா, எதிர் அணியினரை பந்து வீச்சால் கலங்கைடிக்க வேண்டும்.  குறிப்பாக ஐபிஎல்லில் இது மிக முக்கியம்.   இந்திய அணியில் 5,6  சிறந்த  பந்துவீச்சாளர்களை கோலி கொண்டுள்ளார்.  ஐபிஎல்லிலும் இரண்டு, மூன்று சிறந்த சர்வதேச பந்துவீச்சாளர்கள் மற்றும் உள்நாட்டு  பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளார்.  தற்போது உள்ள அணிகளில் ஆசிபி பலம் வாய்ந்ததாக உள்ளது.   இந்த முறை கோப்பையை வெல்ல கோலியின் மீது நிறைய அழுத்தங்கள் உள்ளது.  நிச்சயம் கோப்பையை வெல்வார் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.  ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 19 அன்று துபாயில் தொடங்குகிறது. ஆர்சிபி செப்டம்பர் 20 அன்று அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News