IPL 2021 PBKS vs RR: பஞ்சாப் வெற்றி பெற 186 இலக்கு; அர்ஷ்தீப் சிங் அசத்தல்

IPL 2021 PBKS vs RR: இறுதியாக 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்ய உள்ள பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற 186 ரன்கள் எடுக்க வேண்டும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 21, 2021, 09:40 PM IST
IPL 2021 PBKS vs RR: பஞ்சாப் வெற்றி பெற 186 இலக்கு; அர்ஷ்தீப் சிங் அசத்தல் title=

IPL 2021 PBKS vs RR: ஐபிஎல் 2021 தொடரின் 32 வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று களம் கண்டன. இன்று இரவு 7:00 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாசில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்ததை அடுத்து, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 185 ரன்கள் எடுத்தது.

இரவு 7:30 மணி முதல் தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களம் இறங்கினார்கள். இருவரும் நன்றாக அதிரடி காட்டத்தொடங்கினார்கள். இருவரும் இணைத்து முதல் விக்கெட்டுக்கு 33 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தனர். எவின் லூயிஸ் (Evin Lewis) 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  

மறுபுறம் அரை சதத்தை நெருங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஒரு ரன்னில் தனது அரைசதத்தை தவற விட்டார். ஒருவேளை இன்று அரைசதம் அடித்திருந்தால், ஐபிஎல் போட்டியில் முதல் அரைசதமாக அது அமைத்திருக்கும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன்  சஞ்சு சாம்சன் (Sanju Samson) வெறும் நான்கு ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் மஹிபால் லோமோர் நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினார்கள். லிவிங்ஸ்டோன் 25(17) ரன்களும், மஹிபால் லோமோ 43(17) ரன்களும் எடுத்தார்கள். 

ALSO READ | IPL 2021: ருத்ராஜின் ருத்ரதாண்டவத்தால் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி!

இறுதியாக 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்ய உள்ள பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற 186 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்றி பெற்றால், புள்ளிப் பட்டியலில் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு செல்லும். அதேவேளையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் 5வது இடத்திக்கு முன்னேறும்..

பஞ்சாப் அணி  சார்பில் அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) ஐந்து விக்கெட்டும், முகமது ஷமி (Mohammed Shami) மூன்று விக்கெட்டும், ஹர்பிரீத் பிரார், ஷான் பொரல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

நாளை நடைபெற்றவுள்ள ஐபிஎல் 2021 தொடரின் 33 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதவுள்ளது.

ALSO READ | IPL 2021: வருணின் சுழலில் சுருண்ட ஆர்சிபி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News