ஓய்வு தரவில்லை: ரிஷப் பந்த் குடும்பத்தினர் வைக்கும் குற்றசாட்டு!

அதிகமான பார்வையாளர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வருவதால் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கு ஓய்வெடுக்க நேரம் கொடுக்கவில்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : Jan 2, 2023, 10:54 AM IST
  • விபத்தில் சிக்கிய பந்த்.
  • அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
  • தற்போது மருத்துவனையில் உள்ளார்.
ஓய்வு தரவில்லை: ரிஷப் பந்த் குடும்பத்தினர் வைக்கும் குற்றசாட்டு! title=

வெள்ளிக்கிழமையன்று கடுமையான கார் விபத்தில் சிக்கி டேராடூனின் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த். அவரைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் நடிகர்கள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் பந்திக்கு ஓய்வெடுக்க நேரமில்லை என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். மருத்துவனையினால் சொல்லப்பட்டு இருக்கும் வருகை நேரத்தைப் பொருட்படுத்தாமல் மக்கள் அவரைச் சந்திக்க வருகிறார்கள் என்று அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

ரிஷப் பந்தின் சிகிச்சையை கவனித்து வரும் ஒரு மருத்துவக் குழு உறுப்பினர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது, "ரிஷப் பந்த் உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைப்பது முக்கியம். விபத்தில் ஏற்பட்ட காயங்களால் அவர் இன்னும் வலியுடன் இருக்கிறார். பார்வையாளர்களிடம் தொடர்ந்து பேசுவது விரைவாக குணமடையும் ஆற்றலைக் குறைக்கும். அவரைப் பார்க்கத் திட்டமிடுபவர்கள் இப்போதைக்கு அதைத் தவிர்த்துவிட்டு அவரை ஓய்வெடுக்கவிடட்டும்" என்று கூறினார்.

மேலும் படிக்க | ரோஹித், விராட், சூர்யா ஐபிஎல் 2023ல் விளையாடுவது சந்தேகம்! பிசிசிஐ-ன் புது ரூட்!

மருத்துவமனையின் நிர்வாகப் பிரிவில் உள்ள மற்றொரு ஊழியர் கூறுகையில், "பந்த்திற்கு பார்வையாளர் பார்க்க வருவதை தடுக்க எந்த வழிமுறையும் இல்லை.  மருத்துவமனை வருகை நேரம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை, எந்த நேரத்திலும் ஒரு பார்வையாளர் மட்டுமே நோயாளியை சந்திக்க முடியும். ரிஷப் பந்தின் வழக்கு மிகவும் பிரபலமானது, இதன் காரணமாக அதிகமான பார்வையாளர்கள் வருகின்றனர்.  எனவே இந்த சிக்கல் உள்ளது, ”என்று ஊழியர் கூறினார்.

நடிகர்கள் அனுபம் கெர் மற்றும் அனில் கபூர், சக கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணா மற்றும் கான்பூர் எம்.எல்.ஏ உமேஷ் குமார் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளும் பந்த சிகிச்சையில் உள்ள ஐசியூ வார்டில் அவரை சந்தித்தனர். தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) குழுவும், அதன் இயக்குனர் ஷியாம் சர்மா தலைமையிலான குழுவும் அவரை சனிக்கிழமை சந்தித்தது.  இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், பந்த் ஐசியுவில் இருந்து தனியார் வார்டுக்கு மாற்றப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ரிஷப் பந்த் இனி கிரிக்கெட் விளையாட முடியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News