கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: கங்குலி

ரோஹித் சர்மா போன்ற சிறந்த வீரரை அணியிலிருந்து ஒதுக்கி வைப்பதும் சரியானதல்ல. அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 5, 2019, 04:35 PM IST
கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: கங்குலி
File photo

புதுடெல்லி: டெஸ்ட் தொடரில் இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்தியாவின் இந்த வெற்றியில் வேகப்பந்து வீச்சாளர்களும், நடுத்தர வரிசை பேட்ஸ்மேன்களும் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் தொடக்க வீரர்கள் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை என்பதே நிதர்சனம். 

இதில் முக்கியமான விசியம் என்னவென்றால், ஐ.சி.சி உலகக் கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்த ரோஹித் சர்மாவும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார். ஆனால் விராட் கோலியின் டெஸ்ட் அணியில் விளையாடும் பதினொறு பேரில் ரோஹித் பெயர் இடம் பெற வில்லை. இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. மில்லியன் கணக்கான ரசிகர்கள் முதல் புகழ்பெற்ற மூத்த கிரிக்கெட் வீரர்கள் வரை ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் ஏன் இடம் பெறவில்லை என்ற கேள்விகளை எழுப்பினார்கள். தற்போது சவுரவ் கங்குலியும் ரோஹித் சர்மாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் அணியில் கே.எல்.ராகுலுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளன இந்த வாய்ப்புகளை அவரால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று பிரபல முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். எனவே தொடக்க வீரராக ராகுலுக்கு பதிலாக ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கலாம். 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கே.எல்.ராகுல் நான்கு இன்னிங்ஸ்களில் 101 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவரது அதிகபட்ச ஸ்கோர் 44 ரன்கள். முதல் டெஸ்டில் அவர் இரண்டு முறை சுழல் பந்தில் அவுட் ஆனார். இரண்டாவது டெஸ்டில் இரண்டு முறையும் வேகப்பந்து வீச்சாளர்களிடம் வீழ்ந்தார்.

கங்குலி டைம்ஸ் ஆப் இந்தியாவில் தனது கட்டுரையில் கூறியது, "கே.எல்.ராகுலுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. அவர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஆடவில்லை. டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். ரோஹித் ஒரு சிறந்த வீரர் என்பதால் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதேபோல நடுத்தர வரிசையில் அஜின்கியா ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி சிறப்பாக செயல்படுகிறார்கள். ரோஹித் சர்மா போன்ற சிறந்த வீரரை அணியிலிருந்து ஒதுக்கி வைப்பதும் சரியானதல்ல. அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.