கடைசி 2 ஓவரில் மொத்த போட்டியை ஆர்சிபி பக்கம் மாத்திய தினேஷ் கார்த்திக்!

தினேஷ் கார்த்திகின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசி இரண்டு ஓவர்களில் டிகே போட்டியை மொத்தமாக ஆர்சிபி பக்கம் திருப்பினார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2024, 12:10 AM IST
  • தினேஷ் கார்த்திக் அபாரமான பேட்டிங்
  • அவருடைய பேட்டிங்கால் ஆர்சிபி வெற்றி
  • பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முதல் தோல்வி
கடைசி 2 ஓவரில் மொத்த போட்டியை ஆர்சிபி பக்கம் மாத்திய தினேஷ் கார்த்திக்! title=

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 6ஆவது லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ஆர்சிபி கேப்டன் டூப்ளிசிஸ் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் ஆடியது. ஓபனிங் பேட்ஸ்மேன்களாக பேரிஸ்டோவ், ஷிகர் தவான் களமிறங்கினர். பேரிஸ்டோவ் 8 ரன்களுக்கு அவுட் ஆக, ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருக்கு பின் களம் இறங்கிய பிரப்சிம்ரன் 25 ரன்களும், லிவிங் ஸ்டோன் 17 ரன்களும், சாம் கரன் 23 ரன்களும் எத்தனர். பின்வரிசையில் ஜித்தேஷ் சர்மா 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸ் கொடுத்த ஆபர்! வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்த அனிருத்!

கடைசியில் அதிரடியாக விளையாடிய சசாங்க் சிங் 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 4 பந்துகள் மீதம் இருக்கும்போது 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதாவது 19.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதற்கு முக்கிய காரணம் விராட் கோலி அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். படிதார் 18 ரன்களும், அனுஷ் ராவத் 11 ரன்ளும் எடுத்து ஆவுட்டாக, கடைசியில் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் மற்றும் மகிப்பால் லாம்ரோர் அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

குறிப்பாக 19 மற்றும் அர்ஷ்தீப் சிங் வீசிய 20வது ஓவரில் தினேஷ் கார்த்திக் சூப்பரான ஷாட்கள் ஆடி சிக்சரும் பவுண்டரியும் அடுத்தடுத்து விளாசினார். அவர் வெறும் 10 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 28 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். மகிப்பால் லாம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இப்போட்டியில் தோல்வியை தழுவியிருக்கிறது. 

இதுவரை நடைபெற்ற 6 ஐபிஎல் போட்டிகளிலும் சொந்த மைதானங்களில் விளையாடிய அணிகள் வெற்றியை பெற்றிருப்பது சுவாரஸ்யமான சம்பவமாகும். சிஎஸ்கே, ஆர்சிபி, பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தங்களின் சொந்த மைதானங்களில் விளையாடிய போட்டிகளில் வெற்றியை தன்வசமாக்கியிருக்கின்றன. நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. 

மேலும் படிக்க | மீண்டும் 3வது இடத்தில் களமிறங்கும் விராட் கோலி? ஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News