#INDvsSA: க்வின்டன் டி காக் அவுட்; 2வது விக்கெட்டை கைப்பற்றிய இந்திய அணி

இன்று நடைபெற உள்ள உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவை எதிர்க்கொள்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 5, 2019, 04:19 PM IST
#INDvsSA: க்வின்டன் டி காக் அவுட்; 2வது விக்கெட்டை கைப்பற்றிய இந்திய அணி title=

15:30 05-06-2019
5.5 ஓவரை வீசிய இந்திய வேக பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றி உள்ளார். தென் ஆப்பரிக்கா தொடக்க வீரர் டி காக் அவுட் 10(17) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 


15:18 05-06-2019
3.2 ஓவரை வீசிய இந்திய வேக பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா. தென் ஆப்பரிக்கா தொடக்க வீரர் ஹஷிம் அம்லா 6(9) அவுட் செய்தார். முதல் விக்கெட்டை கைப்பற்றியது இந்திய அணி.

 


14:44 05-06-2019
இன்று நடைபெற உள்ள உலக கோப்பை தொடரின் 8 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இதனையடுத்து இந்திய அணி பந்து வீச உள்ளது.

 


டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற உள்ள 8வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 36 மணிக்கு தொடங்கும். இந்த சவுத்தாம்ப்டன் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும்.

ஏற்கனவே அனைத்து அணிகளும் ஒன்று, இரண்டு ஆட்டங்களில் ஆடி உள்ள நிலையில், உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை இன்று ஆட உள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்தியா மொத்தம் 9 லீக் ஆட்டத்தில் ஆட உள்ளது. அதில் 6 போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு தகுதி பெறலாம். 

உலக தரவரிசையில் 2_வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, நல்ல பார்மில் இருக்கிறது. அனைத்து வீரர்களும் ஒருகிணைந்து செயல்படும் பட்சத்தில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கலாம். ரோகித், சிகர் தவான், ராகுல், கோலி, தோனி மற்றும் ஹர்திக் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். அதேபோல குல்தீப், சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் முகம்மது ஷமி ஆகியோரின் பந்து வீச்சு மிரட்டலாக இருக்கும்.

அதே சமயம், தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்து உள்ளதால், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் லுங்கி என்ஜிடி, டேல் ஸ்டெயின் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. அதிலும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து டேல் ஸ்டெயின் விலகி இருப்பது அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

இன்றைய ஆட்டத்தில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க தென் ஆப்பிரிக்காவும், வெற்றியுடன் தொடங்க இந்தியாவும் ஆட இருப்பதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

தி ரோஸ் பவுல் மைதானத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 373 ரன்கள் எடுத்துள்ளது. அதேபோல குறைந்தபட்சமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக யுனைடெட் ஸ்டேஸ் 65 ரன்கள் எடுத்துள்ளது. 

உலக கோப்பையை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான தென்ஆப்பிரிக்கா 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்று இருக்கிறது. 

தி ரோஸ் பவுல் மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் பந்தை பறக்கவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியா வீரர்கள்: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விஜய் ஷங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார்/முகமது ஷமி, ஜஸ்பிரித்  பூம்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா,

தென் ஆப்ரிக்கா வீரர்கள்: பேப் டு பிளெஸ்ஸி (கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், டுவைன் பிரிடோரியஸ், டாப்ரைஸ் ஷம்சி, ராஸி வான்டெர் டுஸன், ஹாஷிம் அம்லா, ஜீன் பால் டுமினி,  எய்டன் மார்க்ராம், கிறிஸ் மோரிஸ், அண்டில் பெலுக்வாயோ, காகிசோ ரபாடா,

Trending News