ஆசிய விளையாட்டு போட்டி பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் வெண்கலம் வென்றார் சாய்னா நேவால்!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.
இப்போட்டிகளின் 9-ஆம் நாளான இன்று பேட்மிண்ன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளின் அரையிறுதி போட்டி இன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சீனாவின் தை சூ யிங் உடன் போட்டியிட்டார்.
#AsianGames2018 Saina Nehwal loses to Chinese Taipei's Tai Tzu Ying in Badminton Semi-finals, gets Bronze medal. pic.twitter.com/0WWNm1kk5r
— ANI (@ANI) August 27, 2018
ஆரம்பம் முதலே தை சூ யிங்-கின் கை ஓங்கி இருந்த நிலையில் 17-21 14-21 என்ற நேர் செட் கணக்கணக்கில் இந்தியாவின் சாய்னா தோல்வியை தழுவினார். இப்போட்டியில் தோல்வியுற்ற போதிலும் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவிற்கான வெண்கல பதக்கம் ஒன்றினை அவர் பெற்று தந்தார்.
இந்த பதக்கத்தின் மூலம் 1982-ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆசிய போட்டிகளில் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெயரை சாய்னா பெற்றுள்ளார்.