Not Out Players In ODI: கிரிக்கெட்டில் இது ஒருநாள் தொடர் சீசன் எனலாம். வரும் அக். 5ஆம் தேதி முதல் நவ. 19ஆம் தேதி வரை இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதை தொடர்ந்து பல அணிகள் இரு தரப்பு ஒருநாள் தொடரை விளையாடி வருகின்றன. சமீபத்தில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை தொடரில் விளையாடின. இதில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடன் ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது.
இது ஓடிஐ சீசன்
முன்னதாக, ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா உடன் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடின. ஆஸ்திரேலியா அணி டி20 தொடரை கைப்பற்றினாலும், ஒருநாள் தொடரை இழந்தது. தற்போது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கூட ஆஸ்திரேலியா 0-2 என்ற கணக்கில் இழந்துள்ளது, கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (செப். 27) நடைபெறுகிறது. இந்திய அணி தற்போது ஓடிஐ வடிவத்தில் நம்பர் 1 அணியாக உள்ளது.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்தோ, நியூசிலாந்து அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் மோதி 3-1 என கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. இப்படி அனைத்து அணிகளும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்களும் தற்போது ஒருநாள் தொடர் குறித்த சுவாரஸ்ய செய்திகளை தெரிந்துகொள்ள துடிக்கின்றனர்.
அவுட்டாகாத 3 வீரர்கள்
அந்த வகையில், ஒருநாள் கிரிக்கெட்டில் உலகில் எந்த ஒரு பந்து வீச்சாளராலும் ஆட்டமிழக்க முடியாத வீரர்களை இங்கு காணலாம். அதாவது, ஒருநாள் போட்டிகளில் விளையாடி, ஒருமுறை கூட அவுட்டாகாத மூன்று வீரர்கள் குறித்து விவரமாக காணலாம்.
சௌரப் திவாரி
இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய சவுரப் திவாரி அதில் அவுட்டானதே இல்லை. அவர் விளையாடி மூன்று ஒருநாள் போட்டிகளில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடினார். சவுரப் திவாரி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது, அவர் தோனியை போலவே உள்ளார் என கூறப்பட்டது.
சவுரப் திவாரியின் நீளமான தலைமுடியைப் பார்த்து பலரும் அவரை தோனியுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான சவுரப் திவாரி, ஒருநாள் போட்டிகளில் உலகின் எந்த பந்து வீச்சாளராலும் ஆட்டமிழக்க முடியவில்லை.
பாரத் ரெட்டி
இன்றைய இளைஞர்களுக்கு பாரத் ரெட்டி என்ற பெயர் தெரியாது, ஆனால் இந்த வீரர் இந்தியாவுக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். பாரத் ரெட்டி 1978 முதல் 1981 வரை இந்தியாவுக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடினார், அதில் அவர் இரண்டு முறை பேட்டிங் செய்தார். இரண்டு முறையும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்குப் பிறகு, பாரத் ரெட்டியும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஃபைஸ் ஃபசல்
உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது செயல்பாட்டின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஃபைஸ் ஃபசல், இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். ஆனால் இந்த வீரர் இந்திய அணிக்காக ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2016இல் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஃபைஸ் ஃபசல் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார். இந்த அற்புதமான அரை சதத்திற்குப் பிறகும் அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ